கடவுளே! மேயர் இருக்கும் போதே.. புது பாலம் திறந்த 10 நிமிஷத்தில்.. இப்படியா நடக்கணும்? பரபர வீடியோ!
மெக்சிகோ சிட்டி: புது பாலம் திறந்து ஒரு மாதத்தில் உடைந்து போய்விட்டது என்று செய்திகளில் வந்ததை நாம் பார்த்து இருக்கிறோம்.. ஆனால் இங்கு 10 நிமிடத்தில் பாலம் ஒன்று பல்லை காட்டி இருக்கிறது.
Recommended Video
மெக்சிகோவில் இருக்கும் அழகிய நகரம் குயர்னவாக்கா. பெயர்தான் கொஞ்சம் மார்க்கமாக இருந்தாலும்.. சிட்டி மிகவும் அழகான ஒன்றாகும்.
இங்கு நிறைய நதிகள் ஓடுவதுதான்.. இந்த நகரத்தின் சிறப்பே.. இங்கு நதிகளுக்கு இடையில் பல இடங்களில் பாலங்களும் கட்டப்பட்டு உள்ளன.

பாலம்
இந்த நிலையில்தான் குயர்னவாக்கா நகரத்தில் சமீபத்தில் தொங்கு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இரும்பு கம்பிகள், செயின்கள் மூலம் பாலம் கட்டப்பட்டுள்ளது. கீழ் தரை மரக்கட்டைகள் மூலம் போடப்பட்டு இருந்தது. இந்த பாலத்தை இன்று அந்த நகரத்தின் மேயர் ஜோஸ் லூயிஸ் திறந்து வைத்தார். இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

திறந்தனர்
இந்த பாலம் திறந்த உடன் அதை பார்க்க அங்கு பலர் கூடினார்கள். கவுன்சிலர்கள் பலர் அங்கே வந்திருந்தனர். அதேபோல் செய்தியாளர்கள் பலரும் அங்கே கூடினார்கள். இது போக பொதுமக்கள் பலர் அங்கு கூட்டமாக நிரம்பி இருந்தனர். இந்த நிலையில் பாலத்தில் ஒவ்வொருவராக செல்ல தொடங்கினர்.

என்ன நடந்தது
இந்த நிலையில்தான் மக்கள் பாலத்தில் செல்ல தொடங்கியதும் பாலம் படபட வென்று ஆட தொடங்கியது. பாலம் வேகமாக ஆட தொடங்கியது. பார்த்துக்கொண்டே இருக்கும் போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் அந்த நேரத்தில் ஒரு 18- 20 பேர் மட்டுமே இருந்திருப்பார்கள். அப்படியே பாலம் இடிந்து கீழே விழுந்தது.

அதிர்ச்சி
பாலத்தில் இருந்த மக்களும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்தனர். பல பெண்கள், வயதானவர்கள் இதில் இருந்தனர். எல்லோரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால் தண்ணீர் பெரிய ஆழம் இல்லாததால் மக்கள் தப்பித்தனர். இத்தனையும் மேயரின் கண் முன்னே நடந்தது. கீழே விழுந்த மக்களை உடனே மீட்க மீட்பு படை அங்கு வந்தது. credit CMP.

வீடியோ
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. கெயில் விழுந்தவர்கள் மீட்பு படையினர் மூலம் கயிறு வைத்து தூக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலம் திறந்த வெறும் 10 நிமிடத்தில் அது உடைந்து விழுந்துள்ளது. பாலத்தின் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். Credit CMP.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications