கண் கொள்ளா காட்சி.. சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட.. கப்பல் மிதக்கும் அழகை பாருங்க.. வெளியான வீடியோ
கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் "எவர் கிவன்" இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும் பகுதி சூயஸ் கால்வாய் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, மார்ச் 23ஆம் தேதி முதல் "எவர் கிவன்" கப்பல் சூயஸ் கால்வாய் சகதியில் சிக்கி குறுக்கும் மறுக்குமாக நின்று போனது.
இதன் காரணமாக அங்கு பெரும் டிராபிக் ஜாம் ஆகி விட்டது. 450க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் தேங்கி விட்டன.
#BREAKING: watch video of the Ever Given, which was previously clogging the Suez Canal and has now been refloated. Good news in #Egypt.
— Steve Hanke (@steve_hanke) March 29, 2021
pic.twitter.com/6HbkeBpA40
பவுர்ணமி கடல் அலைகள்
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்பு படகுகள் தொடர்ந்து முயற்சி செய்தாலும் சில வாரங்கள் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அந்தக் கப்பல் சகதியில் இருந்து வெளியே வருவதற்கு இயற்கை ஒரு வகையில் உதவி செய்துள்ளது என்று சொல்லலாம். பௌர்ணமி காலம் என்பதால் கடலில் அலைகள் அதிகமாக இருந்தன. இதனால் கப்பல் சகதியில் இருந்து மீண்டு வெளியே வந்து உள்ளது என்கிறார்கள் கடல் சார் நிபுணர்கள்.

கப்பல் வீடியோ
உலகின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் செய்யும் அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சூயஸ் கால்வாய் ட்ராஃபிக் ஜாம் சரியாகுவது எப்போது என்று காத்திருந்த கண்களுக்கு இப்போது விருந்து தயாராகியுள்ளது. ஆமாம், மீட்கப்பட்ட கப்பல் இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

மிதக்கும் கப்பல்
அந்த வீடியோவில், கப்பல் கால்வாய் ஓரமான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு தண்ணீரின் மேல் மிதக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மிக விரைவில் அந்த கப்பல் தானாக இயங்க ஆரம்பித்ததும் அங்கிருந்து கிளம்பி விடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . உலகம் முழுக்க இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் மக்கள். இதனிடையே கப்பல் மிதக்கும் தகவல் வெளியானதும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணை பீப்பாய்க்கு 1 டாலர் குறைந்து 63.67 டாலராக இருந்தது.

பல கப்பல்கள் வெயிட்டிங்
சூயஸ் கால்வாய் அடைபட்டிருந்ததால், தற்போது வரை சுமார் 450 கப்பல்கள் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. எகிப்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் எவர்க்ரீன் கப்பல் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
எகிப்து நிலவரம்
எகிப்து நாடுதான் சூயஸ் கால்வாயை பராமரித்து வருகிறது. இதற்காக அந்த நாட்டுக்கு கப்பல்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்த விபத்து காரணமாக, கப்பல்கள் இயங்காமல் எகிப்துக்கு ஒரு நாளைக்கு சுமார் 14 மில்லியன் டாலர்கள் வருமான இழப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கப்பல் மிதக்க ஆரம்பித்துள்ளதால் அந்த நாடும் ரொம்பவே ஹேப்பியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications