கலிபோர்னியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் தண்ணீர்ப்பஞ்சம்- இந்தியர்களே முழிச்சுக்கோங்க!
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை பெய்யவில்லை. இதனால் நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. எனவே வரலாறு காணாத அளவில் தண்ணீர்ப்பஞ்சம் அங்கு நிலவி வருகின்றது.

60 ஆண்டுகளில் முதல்முறை:
இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது.

காயும் வடக்குப் பகுதி:
அதிலும் தாய்லாந்தில் வடக்கு பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கு வாரம் 2 முறை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது ஒரு முறையாக மாற்றப்பட்டுள்ளது.

மோசமான தண்ணீர் பற்றாக்குறை:
இதுதொடர்பாக அரசு பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் தாய்லாந்தில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது.

தண்ணீரைச் சேமிங்க:
எனவே மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தேவைக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு ”நோ” மழை:
இன்னும் 2 மாதங்கள் கழித்து தான் தாய்லாந்தில் மழை பெய்யும். அதற்குள் நிலைமை மிக மோசமாகிவிடும் என கணித்துள்ளனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications