அமெரிக்காவில் மீண்டும் அறிமுகமாகிறதா கொடூரமான 'வாட்டர்போர்டிங்' சித்ரவதை விசாரணை? ட்ரம்ப் பிடிவாதம்
தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் 'வாட்டர்போர்டிங்' சித்ரவதை விசாரணை அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
வாஷிங்டன்: தீவிரவாதிகளை விசாரிக்க ஏற்கனவே அமெரிக்காவில் அமலில் இருந்த சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா இயக்கத்தினர் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

ஜார்ஜ் புஷ்
இந்த தாக்குதலை தொடர்ந்து கடும் கோபமடைந்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ். எனவே தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அதில் ஒன்றுதான் மக்களால் நினைத்துக் கூட த்ரவதை முறை. அதன் பெயர் ‘வாட்டர்போர்டிங்'

மோசமான சித்ரவதை
இதயம் பலகீனமாக உள்ளவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை வாசகம் வைக்கும் அளவுக்கு இருந்தது அந்த சித்ரவதை. விசாரணைக்கு உட்படுவோர் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும். பின்புறம் அசைய முடியாமல் கம்பியால் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் மூக்கில் மூச்சு விடமுடியாத அளவுக்கு தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மனித உரிமைக்கு எதிரானது
இதனால், பல நேரங்களில் நுரையீரல் சேதம், மூளை பாதிப்பு போன்றவற்றுக்கு இந்த சித்ரவதை வழிவகுக்கும். மூச்சு விடுவதற்காக அந்த மனிதன் போராடும்போது, உள்ளிட்ட உடல் காயங்கள் ஏற்படும். பல நேரங்களில், உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படாத ஒரு நபருக்கு கூட மரண தண்டனை வழங்குவதை போல இந்த நடைமுறை இருப்பதால் சர்ச்சை வெடித்தது.

ஒபாமா தலையீடு
இதையடுத்து, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பராக் ஒபாமா, ‘வாட்டர்போர்டிங்' சித்ரவதை முறைக்கு தடை விதித்தார். இதனால் அவப்பெயரிலிருந்து அமெரிக்கா தப்பியது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அந்த சித்ரவதை அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார். 2015ல் இந்த மாதிரியான விசாரணை முறைக்கு எதிராக செனட்டில் சட்டம் இயற்றப்பட்ட சூழ்நிலையில் கூட டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தில் உறுதியாக உள்ளார்.

ட்ரம்ப் திட்டம்
டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில் "யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே நானும் ‘வாட்டர்போர்டிங்' சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது எனது ந்பிக்கை.

தீவிரவாதிகளுக்கு சமமாக
அப்பாவி மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அதற்கு பதிலடியாக எதையும் செய்வதற்கு அமெரிக்காவை சர்வதேசம் அனுமதிப்பதில்லை.
நாம் தீவிரவாதிகளை எதிர்க்க அவர்களுக்கு சம அளவுக்காவது செயல்பட வேண்டும். நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்கும் என்றுதான் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications