உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்.. திடீரென இறங்கிவந்த ரஷ்யா.. ஒரே ஒரு கண்டிஷன்
உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மாஸ்கோ: ராணுவத்தாக்குதலை நிறுத்தினால் பேசத்தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லால்ரோவ் கூறியுள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது வியாழக்கிழமையன்று காலையில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை கூறியுள்ளது.

தலைநகரை நெருங்கிய ரஷ்ய ராணுவம்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 3 மைல் தொலைவில் ரஷ்ய ராணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகரின் அருகே அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வேதனை
தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது. எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம் என்று கூறியுள்ளார். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம் என்று என்று உக்ரைன் அதிபர் உருக்கமாகப் பேசி வேதனை தெரிவித்துள்ளார்.

போர் பற்றி கருத்து
உலகம் முழுவதும் தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் பற்றிய செய்திகள்தான் பேசப்பட்டு வருகின்றன. போர் தொடர்பாக பல்வேறு நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் ஒன்றாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, போர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.

ஐநா கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து அந்நாட்டில் பேரணி நடத்தியவர்களை கைது செய்ததற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து 50க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யர்கள் பேரணி நடத்தினர். போர் எதிர்ப்பு பேரணி நடத்தியவர்களை ரஷ்ய அரசு கைது செய்ததை ஐ.நா. கண்டித்துள்ளது.

தாலிபன் கருத்து
இது குறித்து தாலிபான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் , பொது மக்களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ரஷ்யா பேசத்தயார்
இதனிடையே உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம் என்றும் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். உக்ரைனுடன் 2ம் நாளாக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார். உக்ரைன் அரசு நடுநிலை குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறுவது பொய் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications