For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கள் செய்தது சரிதான்.. இந்தியாவிற்கு அமெரிக்கா மாஸ் சப்போர்ட்.. பீதியில் பாக்!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியா வரவேற்று இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்கள் செய்தது சரிதான்.. இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு- வீடியோ

    நியூயார்க்: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியா வரவேற்று இருக்கிறார்.

    கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இந்தியா அங்குள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது.

    அதை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் விமானப்படைகள் இடையே நேற்று பெரிய சண்டை நடந்தது. இந்த நிலையில் இந்த தொடர் சம்பவங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியா உடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை செய்துள்ளார்.

    [Read more: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு ... பாகிஸ்தானுக்கு அறிவுரை]

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    அஜித் தோவலிடம் போனில் பேசிய மைக் போம்பியா, பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்கிறோம். ஜெய்ஷ் இ முகமதுவின் மிகப்பெரிய ராணுவ முகாமை இந்தியா தாக்கி அழித்ததை நாங்கள் வரவேற்கிறோம். பாலகோட்டில் நடந்த இந்த தாக்குதல் மிக முக்கியமானது.

    எப்போதும் போல

    எப்போதும் போல

    தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு அளிக்கும். பாதுகாப்பு விஷயத்தில் இரண்டு நாடுகளும் எப்போதும் போல இணைந்து செயல்படும். ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்போதும் போல அமெரிக்காவின் உதவியுடன் தொடரும் என்று மைக் போனில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    பாக் நெருக்கடி

    பாக் நெருக்கடி

    இந்த நிலையில் மைக் இப்படி பேசியது பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சீனாவில் நடந்த மூன்று நாடுகள் மாநாட்டில் ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவுடன் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

    சேரும் அணிகள்

    சேரும் அணிகள்

    இன்று காலைதான் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு எதிராக ஐநாவில் கோரிக்கை மனு வைத்தது. மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக பேசி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    We welcome IAF strike on Jaish camp in Pak says US Secretary of State Mike Pompeo in on phone call to National Security Advisor Ajit Doval.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X