அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்.. அமெரிக்கா, தென்கொரியாவை மீண்டும் மிரட்டும் கிம் ஜாங் உன்
பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கிம் ஜாங் உன் அமெரிக்காவை மிரட்டும் தொனியில் பேசியுள்ளது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உலகின் மர்ம பிரதேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. கொரிய தீப கற்பத்தில் அமைந்து இருக்கும் வடகொரியாவில் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். வடகொரியா மக்கள் பிற நாட்டு மக்கள் வாழும் சுதந்திர வாழ்க்கையை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. வெளி உலக தொடர்பு இன்றி வாழும் வடகொரிய மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

சர்வாதிககார ஆட்சி நடத்தி வரும் வரும் கிம் ஜாங் உன் வல்லராசு நாடான அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் தீராப்பகையை கொண்டு இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம் ஜாங் உன் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே பல முறை இப்படி எச்சரிக்கைகளை கிம் ஜாங் உன் விடுத்து இருக்கிறார். ஆனாலும் தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் கிம் ஜாங் உன் இவ்வாறு மிரட்டல் விடுத்து இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது.
அமெரிக்காவுடன் மோதலை அதிகரிக்கும் வகையில் கிம் ஜாங் உன் இவ்வாறு கூறியிருப்பதாக
சர்வதேச நோக்கர்கள் கூறியுள்ளனர். வடகொரியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பேசிய கிம் ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் மிரட்டலை விடுத்துள்ளார். கிம் ஜாங் உன் கூறுகையில், "வடகொரியா தனது எதிரி நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்காது" என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கிம் ஜாங் உன் கூறுகையில், "தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சி மூலம் தங்களின் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனால், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு சமநிலை அதிகரித்துள்ளது. இதற்கு வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடுதான் பதிலாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார். தென்கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும் சமீபத்தில் அந்த நாடு, அமெரிக்காவுடன் மெற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களால் கோபம் அடைந்த கிம் ஜாங் உன் இவ்வாறு பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications