முடிவுக்கு வரும் இஸ்ரேல் போர்? ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நெதன்யாகு ஒப்புக்கொள்வாரா?
காசா: காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அந்த நாட்டின் 59 பணயக்கைதிகளையும் விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஹமாசுக்கு எதிராக காசாவின் போர் நடவடிக்கை என்பது விரைவில் முடிவுக்கு வரும்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகளாக உள்ளன. காசா விவகாரத்தில் இருநாடுகள் இடையே பிரச்சனை இருந்தது. இது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போராக மாறியது. இருநாடுகள் இடையேயான மோதல் காரணமாக முதலில் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேல் நாட்டில் இருந்த 1,200 பேர் வரை கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 15 மாதமாக நடந்தது.
இஸ்ரேல் காசாவுக்குள் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. மொத்தம் 51 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 90 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எகிப்து மத்தியஸ்தம் செய்ததில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானது.
அதன்பிறகு இஸ்ரேல் தனது நாட்டில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்தது. ஆனால் பணயக்கைதிகளை விடுவிக்க காலதாமதம் செய்ததால் இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நிறுத்தியது. இதனால் மார்ச் மாதம் மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. மீண்டும் காசாவில் தாக்குதலை தொடங்கியது. தற்போதும் தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
இஸ்ரேல் காசாவுக்குள் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. மொத்தம் 51 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் நிரந்தரமாக போர் நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்துள்ளது. அதோடு தங்களிடம் உள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்கவும் தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக உள்ள கலீல் அல் ஹயா தொலைக்காட்சி வாயிலாக நேற்று உரையாற்றினார்.
அப்போது கலீல் அல் ஹயா கூறும்போது, ‛‛இஸ்ரேல் உடன் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் இனி ஓகே சொல்லாது. அரசியல் காரணங்களுக்காக தற்காலிக போர் நிறுத்தங்களை இஸ்ரேல் கையில் எடுக்கிறது. இதற்கு இனி ஹமாஸ் ஒப்புக்கொள்ளாது. அதேபோல் இடைக்கால போர் நிறுத்தம் என்ற பெயரில் ஹமாஸின் ஆயுதங்களை பறிக்கும் இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க மாட்டோம். போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிப்போம்'' என்று கூறியுள்ளார்.
இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் இருநாடுகள் இடையேயான போர் என்பது முடிவுக்கு வரும். முன்னதாக ஹமாஸ் அமைப்புடன் 45 நாள் இடைக்கால போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை ஹமாஸ் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த வாரம் கூட எகிப்து தலைமையில் இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்படியான சூழலில் தான் இஸ்ரேல் முழு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால் 59 பணயக்கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications