குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்
குவைத்: குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இவர், ஒரு புகைப்பட கலைஞரும் கூட.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் மீடியா குழு உறுப்பினர். குவைத்தில் முதல் முறையாக ஹெலிகேம் (ட்ரோன் கேமரா) ஒளிப்பதிவுடன் நிகழ்ச்சிகளை படம் பிடித்தவர்.

இதுவரை 360 கிலோவாக இருந்த குவைத் பளு தூக்கும் வரலாற்றை முறியடித்து, 400 கிலோ பளு தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ள இஸ்லாம் தீன், இதை தனது மனைவிக்கு சமர்ப்பித்து, "மனைவியை காதலியுங்கள், அவர்களின் ஊக்கம் உங்களை பல வெற்றிகளை இறையருளால் ஈட்டிட வைக்கும்" என்றும் கூறியுள்ளார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் அமைப்புகள், பிரபலங்கள் சாதனை படைத்த தமிழருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications