"வெல்கம் டூ ஜக்கிஸ்தான்"... இந்த நாட்டுக்கு இவர்தான் ராசா, இவரே மந்திரி, இவரே குடிமகனும்!
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஜக் லேன்ட்ஸ்பெர்க் ரொம்ப வித்தியாசமான நபராக இருக்கிறார். இவர் தான் வசித்து வரும் நான்கு ஏக்கர் நிலப்பகுதியை தனி நாடாக அறிவித்து அத்தனை பேரையும் அரள வைத்துள்ளார்.
நியூயார்க் அருகே இந்த குட்டி "நாடு" உள்ளது. இது சட்ட ரீதியாக எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை என்றாலும் கூட, தான் ஒரு நாட்டுக்கு அதிபதி என்ற பெருமையை தானே பரப்பியபடி அசத்தி வருகிறார் ஜக்.
இவர் ஒரு கலைஞர் ஆவார். நியூயார்க் அருகே 4 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்ட அவர் அதற்கு ஜக்கிஸ்தான் என்று பெயர் வைத்து அதை தனி நாடாக பாவித்து செயல்பட்டு வருகிறார்.

ஜக்கிஸ்தான் குடியரசு
இந்த நாட்டுக்கு ரிபப்ளிக் ஆப் ஜக்கிஸ்தான் என்று இவர் பெயர் வைத்துள்ளார். இந்த நாட்டுக்குத் தனியாக கொடியும் உண்டு. அதாவது சிவப்பு, மஞ்சள் நிறத்தில இக்கொடி உள்ளது. பாஸ்போர்ட் கூட உண்டு. உள்ளே வருவர் பாஸ்போர்ட்டைக் காட்டி விட்டுத்தான் நுவைய முடியுமாம். 40 டாலர் கொடுத்து பாஸ்போர்ட் பெறலாமாம்.

பார்டர் வேற
இந்த நாட்டுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வேறு உள்ளது. அதாவது ரோபோட்டுகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் ஜக். எல்லைக் கோடும் போடப்பட்டுள்ளது.

இருக்கு ஆனா இல்லை!
இந்த நாட்டுக்கென்று ஒரு தத்துவத்தையும் உருவாக்கியுள்ளார். "Something from nothing" என்பதுதான் அந்த நாட்டின் மோட்டோ ஆகும்.

மக்கள்தான் இல்லை பாஸ்
இந்த நாட்டில் பாஸ்போர்ட், எல்லைப் பாதுகாப்பு எல்லாம் இருந்தாலும் கூட மக்கள்தான் கிடையாது. ஜக் மட்டும்தான் இந்த நாட்டில் இருக்கிறார். அரசும் கிடையாது. பொருளாதாரமும் கிடையாது. தன்னை தானே அதிபராக அறிவித்துள்ளார் ஜக்.

பேப்பர் நாடு
இதுகுறித்து 30 வயதாகும் ஜக் கூறுகையில் இது பேப்பர் அளவில் உள்ள நாடுதான். கற்பனையான நாடுதான். சட்டப்பூர்வமானதும் கிடையாது. ஆனாலும் இப்படி ஒரு நாடு இருப்பதே எனக்குப் பெருமைதான். படிப்படியாக இது இறையாண்மை கொண்ட நாடாக மாறினால் சந்தோஷம்தான்.

10 வருடமாக
இந்த குட்டி நாடு கடந்த 10 வருடமாக இருக்கிறதாம். அதாவது தனது 20 வயதில் இந்த நாட்டை உருவாக்கியுள்ளார் ஜக்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications