சீனா எடுத்த பெரிய முடிவு.. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு புதிதாக சூப்பர் சலுகைகள்
பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனா, மக்கள் தொகையில் அண்மைக் காலம் வரை முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சீனாவை ஆளும் இடதுசாரி அரசின் கொள்கையால் இந்த மாற்றம் நடந்தது. ஆனால் அந்த கொள்கையை தளர்த்திய சீனா, இப்போது அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு புதிய சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.
ஒரு காலத்தில் எவை எல்லாம் சரி என்று நினைத்தார்களோ.. இன்று அவை தவறாக மாறி வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் தான் வறுமைக்கு காரணம் என்று உணர்ந்த அரசுகள். மக்கள் தொகை பெருக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்தின. ஆனால் அதன் விளைவுகள் வேறு மாதிரி ஏற்பட்டு வருகிறது. முதியோர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் இல்லாத நிலையும் ஏற்பட தொடங்கியது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. பாலின சமநிலையில் மட்டுமல்ல.. பல நாடுகளில் மக்கள் தொகை பெருக்கமும் கடுமையாக சரிவினை சந்தித்துள்ளது. உதாரணமாக சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் மக்கள் தொகை சரிந்து வருவதால் கவலையில் உள்ளன.

கடந்த சில ஆண்டுகள் வரை, மக்கள்தொகையில் சீனா உலகிலேயே முதலிடத்தில் இருந்தது. அந்த இடத்தை இந்தியாவிடம் சில ஆண்டுக்கு முன்பு பறிகொடுத்துள்ளது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி பின்பற்றிய 'ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற கொள்கையால் நிலைமை ஏற்பட்டது. அதனால், மக்கள்தொகை பெரிய அளவில் சரிந்தது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு அந்த கொள்கையை சீனா அதிரடியாக ரத்து செய்தது. 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. அதன்பிறகும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்ல்லை. இதனால் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தது. சீனாவின் தற்போதைய மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. இவ்வளவு மக்கள் தொகை இருந்தாலும் இதில் பெரிய அளவில் பாலின விகிதம் குறைந்துள்ளது. முதியோர் இளைஞர்கள் விகிதம் கடுமையாக மாறி உள்ளது.
அதாவது சீனாவில் முதியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 140 கோடி மக்கள் தொகையில், 65 வயதை தாண்டியவர்கள் 14 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இதில் 60 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 30 கோடி என்று சீன அரசு வெளியிட்ட புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதியோர்களின் எண்ணிக்கை 2035-ம் ஆண்டுக்குள் 40 கோடியே தாண்டும் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேபோல் 2050-ம் ஆண்டுக்குள் 50 கோடியை எட்டும் என்றும் சீன அரசு கணித்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து விட்டதால், சீனா முழுவதும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள், முதியோர் இல்லங்களாகவும் மாற்றப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தை பிறப்பு சரிவை கட்டுப்படுத்தி, மக்கள்தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு சலுகைகளை இப்போது அறிவித்து வருகிறது.
சீனாவில் இடதுசாரி அரசின் அமைச்சரவை புதிதாக சில சலுகைகளுடன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிக குழந்தைகளை தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோருக்கு குழந்தைப்பேறு மானியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பான சலுகைகள் அளிக்கப்படும் என்றும் வருமானவரி சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனுபவித்து வரும் ஊரக இடம்பெயர் தொழிலாளர்களுக்கு பேறுகால காப்பீட்டு திட்டமும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவில் பேறுகால விடுமுறை, குழந்தை பராமரிப்பு விடுமுறை தொடர்பான கொள்கைகளை சரியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications