வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்.. உலகின் டாப் 10 சொகுசு சிட்டி.. இந்திய நகரங்கள் லிஸ்டில் இருக்கா?
லண்டன்: உலகின் ஆடம்பரமான 10 நகரங்கள் குறித்த பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தாண்டியும் ஆசியாவில் இருந்து இரு நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் உள்ள அந்த ஆசிய நகரங்கள் எவை? இந்தியாவில் இருந்து எதாவது நகரம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த உலகில் ஆடம்பரமான 10 நகரங்கள் குறித்த பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் முதலிடத்தில் இருக்கிறது. இந்த லில்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதேநேரம் இந்தியாவில் இருந்து எந்தவொரு நகரமும் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை.

ஆடம்பர நகரங்கள்
உலக ஆடம்பர நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 900 விலையுயர்ந்த உணவகங்கள், 150 நட்சத்திர விடுதிகள் அங்கு உள்ளன.மேலும், ஷனல், லூயிஸ் விட்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனங்களும் பாரிஸில் உள்ளது. பாரம்பரியமும் நவீன ஆடம்பரமும் கைகோர்த்து இருக்கிறது. இதன் காரணமாகவே அரிய பொருட்களைக் காட்சிப்படுத்தும் லூவர் அருங்காட்சியகம் முதல் பாரிஸ் ஃபேஷன் வரை பிரபலமானதாக இருக்கிறது.
அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இருக்கிறது.. நுட்பமான அழகுடன், இது தனித்துவமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 279 உயர்தர உணவகங்கள், 125 ஆடம்பர ஹோட்டல்கள் இங்கு உள்ளன. சுமார் 94,000 கோடீஸ்வரர்கள் வசிக்கும் மெல்போர்னில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
3வது இடம் யாருக்கு
இதில் 3வது இடத்தில் சூரிச் இருக்கிறது. அங்கு வாழும் ஒரு லட்சம் பேரில் சுமார் 17,700 கோடீஸ்வரர்கள் ஆவர். இது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்கள் வசிக்கும் நகரமாகும். சுவிட்சர்லாந்து ஆட்சியாளர்களின் ஸ்திரத்தன்மை, ஆல்ப்ஸ் மலைகளின் அழகு, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் சூரிச் நகரில் உள்ளது. இது லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறது.
அமெரிக்கா ஆதிக்கம்
அமெரிக்காவின் மியாமி இதில் 4வது இடத்தில் இருக்கிறது. அழகிய கடற்கரை, மாளிகை போன்ற வீடுகள் மற்றும் 120+ உயர்தர உணவகங்களுடன் மியாமி 4வது இடத்தில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மியாமியில் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 94% அதிகரித்துள்ளது.. அப்படி என்றால் அந்த நகரில் எவ்வளவு ஆடம்பர வசதிகள் இருக்கும் என யோசித்துப் பாருங்கள்!
மற்றொரு அமெரிக்க நகரமான நியூயார்க் நகரம் இதில் 5வது இடத்தில் இருக்கிறது. 3.84 லட்சம் கோடீஸ்வரர்கள் மற்றும் 66 பில்லியனர்களைக் கொண்ட நகரமாக நியூயார்க் இருக்கிறது. நியூயார்க்கில் வாழ்க்கை செலவுகள் அதிகம் என்றாலும் கோடீஸ்வரர்கள் விரும்பி வாழும் நகரமாக நியூயார்க் இருக்கிறது. 400+ உயர்தர உணவகங்கள், தனியார் கிளப்புகள், ஆடம்பர குடியிருப்புகளைக் கொண்ட பிரம்மாண்ட நகரமாக நியூயார்க் இருக்கிறது.
ஹாலிவுட் நகரம்
7வது இடத்திலும் இன்னொரு அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் இருக்கிறது. ஹாலிவுட்டின் தாய் வீடாக கருதப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2.12 லட்சம் கோடீஸ்வரர்கள் மற்றும் 43 பில்லியனர்கள் வசிக்கின்றனர். உயர்தர எஸ்டேட்கள், தனியார் கிளப்கள் என சொகுசான பல வசதிகளை இது தருகிறது. சினிமாவை தாண்டியும் தொழில்முனைவோருக்கும் ஏற்ற ஒரு இடமாக லாஸ் ஏஞ்சல்ஸ் இருக்கிறது
அடுத்த இடத்தில் இத்தாலியின் மிலன் வருகிறது. 193 உயர்தர உணவகங்கள், 76 ஆடம்பர கடைகள், காலத்தால் அழியாத வடிவமைப்புகளைக் கொண்ட மிலன் இதில் 7ஆவது இடத்தில் வருகிறது. பேஷன் தலைநகரான மிலனில் தான், பல சர்வதேச நிறுவனங்கள் இயங்குகின்றன.
ஆசிய நகரங்கள்
அடுத்து 8வது இடத்தில் ஆசி சிங்கப்பூர் வருகிறது. 2.42 கோடீஸ்வரர்களை கொண்டு ஆசியாவின் முக்கிய நகரமாக சிங்கப்பூர் இருக்கிறது. ஆசியாவின் நிதி மையமான சிங்கப்பூர், இப்போது ஒரு முக்கிய ஆடம்பர சுற்றுலாத் தலமாக வளர்ந்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை தொடங்கி ஊழலற்ற நிர்வாகம் வரை எல்லாமே சிங்கப்பூருக்கு பிளஸ் தான்.
9வது இடத்தில் தென் கொரியாவின் சியோல் இருக்கிறது. 350-க்கும் மேற்பட்ட உயர்தர உணவகங்கள் மற்றும் வளர்ந்து வரும் உயர் ஃபேஷன் துறையுடன் ஆடம்பர நகரங்கள் பட்டியலில் சியோல் நுழைந்துள்ளது. பாரம்பரியமும் நவீன ஆடம்பரமும் கலந்த ஒரு நகரமாக சியோல் இருக்கிறது.
10வது இடத்தில் ஷாக்
அடுத்து 10வது இடத்தில் லண்டன் வருகிறது. காலத்தால் அழியாத நேர்த்தியுடன் ஆடம்பர வசதிகளை லண்டன் அள்ளி கொடுக்கிறது. அங்கு வாழும் ஒரு லட்சம் மக்களுக்கு சுமார் 2,200 பேர் கோடீஸ்வரர்கள். லண்டன் ஒரு கலாச்சார மற்றும் நிதி மையமாக தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. அதேநேரம் பல ஆண்டுகளாக உலகின் ஆடம்பரமான நகரமாக இருந்த லண்டன், இப்போது 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications