ப்ரிகோஜினிடம் அப்போதே எச்சரித்தேன்.. புதினை பற்றி எனக்கு நன்கு தெரியும்.. பெலராஸ் அதிபர் பரபர
மாஸ்கோ: வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து முன்பே எச்சரித்ததாக பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்ய முயன்றவர் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தின் தலைவர் ப்ரிகோஜின். இருப்பினும், புதினுக்கு எதிரான கலகத்தை அவர் சில நாட்களிலேயே கைவிட்டார்

ப்ரிகோஜின் அதன் பிறகு வெளிநாடுகளில் தஞ்சம் புகுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் அப்படிச் செய்யாமல் ரஷ்யாவுக்கே திரும்பினார். அதிலும் அதிபர் புதினை சந்தித்து நேரடியாக விளக்கம் கொடுத்தார்.
மரணம்: இருப்பினும், ப்ரிகோஜின் விரைவில் கொலை செய்யப்படலாம் என்று அப்போதே அமெரிக்க அதிபர் புதின் தொடங்கி பலரும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சொன்னபடியே நடந்துவிட்டது. நேற்று முன்தினம் ப்ரிகோஜின் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது. அவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்து இங்கே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
அதாவது விமானம் விபத்தில் சிக்கும் 30 நொடிகளுக்கு முன்பு வரை விமானத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. கடைசி நொடிகளில் தான் ஏதோ நடந்துள்ளது. விமான விபத்து குறித்த வீடியோவில் கூட விமானம் செங்குத்தாகக் கவிழ்ந்ததும், அதில் இருந்து புகை மற்றும் நெருப்பு வெளியே வருவதும் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எச்சரித்தேன்: இதற்கிடையே பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது வாக்னர் குழு தலைவர்களான யெவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி தான் ஏற்கனவே எச்சரித்ததாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்னர் வீரர்கள் பெலாரஸில் நாட்டில் இருப்பது தான் பாதுகாப்பானது என்றும் தான் வலியுறுத்தியதாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்தார். முன்பு புதினுக்கு எதிராகக் கலகம் செய்த போது, ஆரம்பத்தில் கலகம் செய்த அனைவரையும் ஒழிப்பேன் என புதின் கூறியிருந்தார். இருப்பினும், சில நாட்களில் நிலைமை தலைகீழானது. பிரிகோஜின் மற்றும் அவரது சகாக்கள் சிலர் பெலாரஸ் நாட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ப்ரிகோஜின்: அங்கு வைத்துத் தான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னரே கலகத்தைக் கைவிடுவதாக ப்ரிகோஜின் அறிவித்தார். அதன் பிறகு சில நாட்கள் ப்ரிகோஜின் ரஷ்யா செல்லாமல் பெலாரஸ் நாட்டிலேயே இருந்தார். அதன் பின்னரே ப்ரிகோஜின் ரஷ்யா திரும்பினார். இப்போது அவர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிகோஜின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பெலராஸ் அதிபர் மேலும் கூறுகையில், "ப்ரிகோஜினை எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னேன். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இரண்டு முறை எச்சரித்தேன். இருப்பினும், அவர் எனது எச்சரிக்கையை நிராகரித்தார். ரஷ்யாவில் கலகம் செய்தால் நிச்சயம் கொல்லப்படுவாய் என நான் கூறினேன். அதற்கு அவர் உயிரே போனாலும் பரவாயில்லை. இதை நிச்சயம் செய்வேன் என ஆவேசமாகக் கூறினார்.
நான் எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்ன இரண்டு பேருமே உயிரிழந்துவிட்டனர். எனக்கு புதினை நன்கு தெரியும்.. அவர் என்ன எப்படிக் கணக்கிடுவார்.. புதின் தான் இதைச் செய்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார். இவரது இந்தக் கருத்துகள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் ப்ரிகோஜின் மற்றும் லுகாஷென்கோ இடையே இந்தப் பேச்சுவார்த்தை எப்போது நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications