"மனசு வலிக்குது!"இந்து கோயில்களே முக்கிய குறி? கனடா நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்! கவனித்த ஸ்பீக்கர்
கனடா நாடாளுமன்றத்தில் இந்துபோபியாவுக்கு எதிராகக் குரல் எழுந்துள்ளது.
ஒட்டாவா: கனடா நாட்டில் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாகக் கனடா நாடாளுமன்றத்திலேயே எம்பி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அவரது பேச்சை அந்நாட்டு எம்பிக்கள் கவனித்துக் கேட்டனர்.
இந்தியர்கள் இப்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று செட்டில் ஆகி வருகின்றனர். ஐடி உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் தேவை மிக மிக அதிகமாகவே உள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்கள் செல்கிறார்கள்.
குறிப்பாகக் கனடாவில் இந்தியர்களின் மக்கள் தொகை ரொம்பே அதிகமாக உள்ளது. அங்குள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 5% மேலானவர்கள் இந்தியர்களாக உள்ளனர்.

பிரிவினைவாதம்
அதேநேரம் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்களும் அங்கு வலுவாகவே உள்ளது. இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அவர்கள் இந்தியாவில் இருந்து காலிஸ்தானை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அங்கிருந்து குரல் கொடுக்கிறார்கள்.

கனடா
மேலும், அங்கு இந்தியத் தலைவர்கள் வரும் போதும், இந்தியாவின் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்றும் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்புவார்கள். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோயில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் நாசப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் காலிஸ்தான் பிரிவினைவாத கோஷங்களும் அதில் இடம் பெற்றிருந்தது.

எழுந்த குரல்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், காலிஸ்தான் இயக்கத்தையே பிரிட்டனில் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. இதனிடையே இந்துக்கள் மீதான வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கனடா நாடாளுமன்றத்திலேயே எம்பி ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

என்ன சொன்னார்
கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா, இந்தத் தாக்குதலைக் கண்டித்து, கனடாவில் அதிகரிக்கும் வெறுப்பு வாதம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், "கனடாவில் அதிகரித்து வரும் இந்து மதவெறியால் கனடாவில் வாழும் இந்துக்கள் வேதனை அடைந்துள்ளனர்.. இது ஒரு ஆபத்தான போக்கு.. இந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு-குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பல நேரங்களில் இந்துபோபியா தாக்குதலாக மாறுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

கண்டனம்
கோயில் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியா எதிர்ப்பு மனநிலையைக் கொண்டவர்களால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகச் சாடினார். அதேபோல டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் அங்குள்ள இந்து கோயில் சேதப்படுத்திய சம்பவத்தைக் கண்டித்தனர். மேலும், இந்து சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இது இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications