பின்னால் இருந்து 2 முறை தாக்குதல்! சரிந்து விழுந்த ஜப்பான் மாஜி பிரதமர்! ஷின்சோ சுடப்பட்டது எப்படி?
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று சுடப்பட்டார். நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அவர் இளைஞர் ஒருவரால் சுடப்பட்டார்.
Recommended Video
இவர் சுடப்பட்டது எப்படி? என்ன நடந்தது? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் பிரதமர் அபே கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலையை காரணம் காட்டி, இவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதோடு ஆக்டிவ் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

ஆக்டிவ் அரசியல்
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வர ஷின்சோ அபே முயன்று வந்தார். நாரா என்ற ஜப்பான் மேற்கு பகுதியில் நடக்க இருந்த உள்ளூர் தேர்தலில் தன்னுடைய லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றார். மக்கள் முன்னிலையில் அபே பேசிக்கொண்டு இருந்த நிலையில்தான் அவர் பின்னால் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டார். முதலில் துப்பாக்கி சத்தம் மட்டுமே கேட்டுள்ளது.

சத்தம்
இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட அடுத்த நொடியே அபே சுருண்டு விழுந்துள்ளார். இந்த நிலையில்தான் அவரின் இதயத்தில் குண்டு பாய்ந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கையில், அவர் பின்னால் இருந்து சுடப்பட்டுள்ளார். அவரின் நெஞ்சு பகுதியிலே exit wound உள்ளது. அதாவது குண்டு துளைத்து வெளியே வந்த காயம் உள்ளது.

இரண்டு முறை சூடு
இரண்டு முறை அவர் சுடப்பட்டுள்ளார். நெஞ்சில் சுடப்பட்டதும் அவர் சுருண்டு விழுந்துள்ளார், என்று குறிப்பிட்டுள்ளனர். சுடப்பட்ட உடன் அவருக்கு சுயநினைவு போய் விட்டது என்று கூறப்படுகிறது. அவருக்கு பல்ஸ் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம்
இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்ட நபர் இளைஞர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அபேவை சுட்டதாக கருதப்படும் இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 41 வயதே இருக்கும் என்று கூறப்படுகிறது . இவரின் பெயரின் யமகாமி டேட்சுயா என்று கூறப்பட்டுள்ளது. இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications