இந்தியாவுடனான உறவு ரொம்பவே முக்கியம்! மீண்டும் புகழ்ந்த இம்ரான்.. ஆனால் பாஜக பற்றி பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவ்வப்போது பேசி வரும் நிலையில், இப்போது பாஜக அரசு குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2018 முதல் சில மாதங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கூட்டணிக் கட்சிகளே திடீரென அவருக்கு எதிராகத் திரும்பியதில், அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது.

இப்போது அங்கு ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். இருப்பினும், வெளிநாட்டுச் சதி காரணமாகவே தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து கூறி வருகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

தற்போதுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அங்கு நாடு முழுவதும் பிரசாரம் செய்து வரும் அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் அடிக்கடி பாராட்டி வருகிறார். இதற்கிடையே இந்தியா உடனான நல்லுறவு இரு நாடுகளுக்கும் மிகப் பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ள இம்ரான் கான், தற்போது இந்தியாவில் ஆட்சியில் உள்ள பாஜக குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

இம்ரான் கான்

இம்ரான் கான்

பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'தி டெலிகிராப்' க்கு இம்ரான் கான் அளித்துள்ள விரிவான பேட்டியில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நல்லுறவு தேவை. என்னைப் பொறுத்தவரை இந்தியா உடனான நல்லுறவு ரொம்பவே முக்கியம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாகப் பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் மிகப் பெரியது. ஆனால், இதை முன்னெடுத்துச் செல்லவிடாமல் காஷ்மீர் பிரச்சினை இன்னும் தடையாக உள்ளது.

பாஜக

பாஜக

இதையும் தாண்டி இந்தியா உடன் பாகிஸ்தானால் சுமுகமான உறவை ஏற்படுத்த முடியும். ஆனால், இந்தியாவில் தற்போதுள்ள பாஜக அரசு கடுமையான தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.. தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவதால், இதுபோன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. தேசியவாத சிந்தனைகள் இதுபோல ஒரு முறை வெளியேறிவிட்டால், அதை மீண்டும் உள்ளே அடைப்பது ரொம்பவே கடினம்.

திட்டம் வேண்டும்

திட்டம் வேண்டும்

காஷ்மீர் பிரச்சினையைச் சரி செய்ய இந்தியாவிடம் ஒரு திட்டம் வைத்திருந்தால் அதுவே எங்களுக்கு போதும். கடந்த 2019இல் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய ரத்து செய்து இருந்தது. அதன் பின்னர் இந்தியா உடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைப் பாகிஸ்தான் சரி செய்யும் நேரம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே நல்ல ஒரு உறவு இல்லை.

இந்தியா பாகிஸ்தான் உறவு

இந்தியா பாகிஸ்தான் உறவு

காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டும் பயங்கரவாதம் ஆகியவற்றால் பாகிஸ்தான் மீது இந்தியா அதிருப்தியில் இருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.. இது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை மேலுமே மோசமாக்கியது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன், டெல்லியுடனான தூதரக உறவுகளை குறைத்த பாகிஸ்தான், இந்தியத் தூதரையும் வெளியேற்றியது. அப்போது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பெரும்பாலும் முடங்கியது.

அனைத்து உலக நாடுகள்

அனைத்து உலக நாடுகள்

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் முழுவதும் அவர் பிரசாரம் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் அவர், இந்த பேட்டியைக் கொடுத்துள்ளார். இந்தியா மட்டுமின்றி மற்ற அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் உறவு ரொம்பவே முக்கியம். இது இரு நாடுகளுக்கும் நல்ல பலனைத் தான் தரும். கடந்த பனிப்போரில் நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து இருந்தோம். அதேபோல மீண்டும் ஒரு சூழல் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஏழ்மை நிலை

ஏழ்மை நிலை

பாகிஸ்தானில் இப்போது பல கோடி பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அவர்களைச் சீக்கிரம் ஏழ்மை நிலையில் இருந்து மீட்கச் சிறந்த வழி, நாம் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து நாடுகள் நம்மால் வர்த்தகம் செய்ய முடியும். இது தான் பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+