'சாருக்கு எப்ப கல்யாணம்'.. அடிக்கடி கிண்டல் செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. என்னாச்சு தெரியுமா?
ஜகர்த்தா: கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் பலரை பார்த்து இன்றைய 2கே கிட்ஸ் அல்லது அந்த காலத்து ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி? எப்போது கல்யாணம் என்பது தான்? உன்னோடு படித்தவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிடுச்சு.. நீ மட்டும் ஏன் கல்யாணம் பண்ணல என்று கேட்பார்கள்.. அப்படி இந்தோனேஷியாவில் கேள்வி கேட்ட முதியவருக்கு என்ன கதி ஏற்பட்டது தெரியுமா? பாருங்கள்.
80களில் பிறந்தவர்கள் கல்யாணம் ஆகி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். 2000க்குபிறகு பிறந்தவர்களும் கல்யாணம் ஆகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். 1985 முதல் 1995 வரை பிறந்த 90ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவிக்கிறார்கள். திருமணத்திற்கு பெண் தேடினால், எவ்வளவு வசதி உள்ளது. கடன் உள்ளதா, சொந்தமாக வீடு உள்ளதா, கார் உள்ளதா, கல்யாணத்திற்கு பிறகு தனி வீடு பார்ப்பீர்களா, சென்னையில் செட்டில் ஆவீர்களா, பெங்களூரில் செட்டில் ஆவீர்களா, பேங்க் பேலன்ஸ் என்ன என்று கேட்பார்கள்.. நல்ல வசதியும், அழகும் உள்ள மாப்பிள்ளைகளுக்கு உடனே திருமணம் ஆகிறது.

ஆனால் மற்றவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆவதில்லை.. அழகாக இல்லை என்று பணக்கார மாப்பிள்ளைகளும், பணம் இல்லை என்று ஏழை மாப்பிள்ளைகளும் நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம், கடந்த 20 வருடங்களில் நடந்த மக்கள் தொகை கட்டுப்பாடு தான். பல வீடுகளில் ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளே பிறந்த காரணத்தால் ஆண், பெண் பாலின விகிதம் மாறியிருக்கிறது.
குறிப்பிட்ட சாதிகளில் பெண்கள் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது வித்தியாசம் 10 வருடம் வரை கூட இருக்கிறது. அப்படி 10 வருடம் காத்திருந்தாலும் பெண் கிடைக்காத நிலை பல சாதிகளில் இன்றும் உள்ளது. இது எதார்த்தம்.. இப்படியான சூழலில் திருமணம் எப்போது என்று அடிக்கடி கேள்வி கேட்கும் முதியவர்களை பார்த்து 90ஸ்கிட்ஸ்கள் எரிச்சல் அடைகிறார்கள். அதேபோல் சிலர், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் திருமணம் நடைபெறாத அளவிற்கு, அவர்களை பற்றி தப்பு தப்பாக பெண் வீட்டாருக்கு கூறி விடுகிறார்கள்.. அப்படிப்பட்ட முதியவர்கள் குறித்து நம்மூரில் போஸ்டரே அடித்துள்ளார்கள்.
இப்படி எல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என அடிக்கடி கேள்வி கேட்டு டார்ச்சர் செய்த பக்கத்து வீட்டு முதியவரை கொலையே செய்திருக்கிறார். இந்தோனேஷியாவில் வசிக்கும் சிரேகருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. பல இடங்களில் பெண் தேடியும் இவருக்கு இன்றுவரை அமையவில்லை.. இதனிடையே இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர்தான் 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும் போதெல்லாம், "எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?" என்று கிண்டலாக கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக், இவரை சும்மா விடக்கூடாது என்று முடிவு செய்ததுடன், கடந்த ஜுலை 29 ஆம் தேதி அன்று கடும் கோபத்துடன் அசிம் வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
ஆனால் பயந்து போன அசிம் கதவை திறக்கவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த சிரேக் வீட்டு கதவை அடித்து உடைத்தார்.. நேரடியாக அசிமை மரக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அசிம் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனாலும் விடாத சிரேக், அவரை பிடித்து மீண்டும் பலமாக தலையில் அடித்துள்ளார் . இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தடுத்துள்ளனர்.
அதன் பின்னர ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அசிமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி அசிமின் மனைவி போலீசாரிடத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிரேக் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏன் இப்படி செய்தார் என்று போலீசார் காரணம் கேட்டுள்ளனர்..அதற்கு சிரேக் கூறுகையில் , " கல்யாணம் எப்போது? என்று எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டு கிண்டல் செய்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நான் அவரை அடித்துக் கொன்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications