சாப்பாடு விஷமாகும்.. பலர் சாகலாம்.. அமெரிக்காவிற்கும் சீனா அனுப்பிய சீக்ரெட் வைரஸ்.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவிற்குள் சீனா Fusarium graminearum என்ற கிருமியை கொண்டு வந்ததாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கிருமி மூலம் அமெரிக்கா மீது சீனா பயோ வார் தொடுக்க திட்டமிட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது.

ஃபியூசேரியம் கிராமினியரம் - Fusarium graminearum என்றால் என்ன?

"Fusarium graminearum" அதாவது ஃபியூசேரியம் கிராமினியரம் என்பது பயிர்களில் "தலைப்பகுதி கருகல்" (head blight) என்ற நோயை உண்டாக்கும் ஒரு வகை பூஞ்சை ஆகும். இது கோதுமை, பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைத் தாக்கி சேதப்படுத்துகிறது. மிச்சிகனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லியு இது ஒரு "கடுமையான நோய்க்கிருமி" என்று கூறுகிறார். மேலும் இது பயிர்களின் மகசூலை கணிசமாகக் குறைத்து விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பூஞ்சான் நோயானது தானியங்களின் தரத்தை மட்டுமல்லாமல், கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உற்பத்தி செய்கிறது என்று படேல் கூறுகிறார். இது மனிதர்களுக்கும் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். அதாவது மக்கள் சாப்பிடும் உணவே விஷமாக மாறும். ஒரே அடியாக மரணத்தை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து சாப்பிட்டால் நீண்ட கால் உடல் உபாதைகள் ஏற்பட்டு பின்னர் மரணம் ஏற்பட காரணமாக அமையலாம்.

எப்படி அமெரிக்கா உள்ளே வந்தது?

அமெரிக்காவிற்குள் அபாயகரமான பயோ ஆயுதம்.. அதாவது பயோ வைரஸ் கிருமியை கடத்தியதாக கூறப்படும் சீன நாட்டவர் ஒருவரை FBI கைது செய்துள்ளது. இது தொடர்பாக FBI இயக்குனர் காஸ் பட்டேல் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

யுன்கிங் ஜியான் என்ற அந்த நபர், "ஃபியூசேரியம் கிராமினியரம்" எனப்படும் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒரு விவசாய பயங்கரவாத கிருமி ஆகும். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து அதை ஆராய்ச்சி செய்வதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஞ்சையினால் கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு "ஹெட் பிளைட்" என்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புகளுக்கு இது காரணமாகிறது. ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமி தொடர்பான பணிகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படிப் பரவுகிறது?

"Fusarium graminearum" பூஞ்சையானது "ஸ்கேப்" (scab) எனப்படும் நோயை ஏற்படுத்துகிறது. இது கோதுமை மற்றும் பார்லி போன்ற தானியப் பயிர்களைப் பாதிக்கிறது. கதிர் உருவாகும் சமயத்தில் இந்தப் பூஞ்சான் தாக்குதல் ஏற்பட்டால், மகசூல் இழப்பு அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் தீவனங்களில் "மைகோடாக்சின்கள்" (mycotoxins) இருக்கலாம். இது கால்நடைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

What is Fusarium graminearum Why is China smuggling it into the USA a Dangerous issue
Photo Credit:

இந்த பூஞ்சையின் இனப்பெருக்க உறுப்புகள் (ஸ்போர்கள்) காற்றில் பரவி, பயிர்களைத் தாக்குகின்றன. குறிப்பாக, அறுவடைக்குப் பின் வயல்களில் எஞ்சியிருக்கும் பயிர்க் கழிவுகளில் இவை அதிகளவில் காணப்படும். பூஞ்சைகள் காற்றின் மூலம் பரவி, புதிய பயிர்களில் படிந்து நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. கதிர் உருவாகும் சமயத்தில், இதமான ஈரப்பதமான சூழ்நிலை நிலவும்போது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த பூஞ்சைகள் பூ மற்றும் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் நேரத்தில் உள்ளே சென்று, பயிரின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. பூஞ்சைகள் உள்ளே நுழைந்த 24 முதல் 84 மணி நேரத்திற்குள் விஷத்தன்மை கொண்ட நச்சுக்களை உற்பத்தி செய்கின்றன. இது பயிரின் திசுக்களை அழித்து, தானியங்கள் சுருங்கிப் போகச் செய்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தானியங்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, "Fusarium graminearum" பூஞ்சையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இதன் காரணமாகவே சீனாவின் இந்த பயோ வார் திட்டத்தால் அமெரிக்கா கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+