Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பணமதிப்பு நீக்கம்.." முடங்கியது ஆப்பிரிக்காவின் பெரிய பொருளாதாரம்.. இந்தியாவை போலவே.. அதே காட்சிகள்

ஆப்பிரிக்காவின் முக்கிய நாட்டில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அபுஜா: இந்தியாவில் எப்படிக் கடந்த 2016இல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதோ.. அதேபோல ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டிலும் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த கடந்த 2016 நவ.8ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு மக்களுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தது.. இதற்கிடையே இப்போது மற்றொரு உலக நாடும் பல்வேறு காரணங்களுக்காகப் பணமதிப்பு நீக்க முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

 பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

கடந்த 2016 நவ.8ஆம் தேதியை அவ்வளவு சீக்கிரம் அனைவராலும் மறந்துவிட முடியாது. அன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலில் கூறப்பட்டது.. இருப்பினும், அப்போது புழக்கத்தில் இருந்த தொகையில் சுமார் 99% நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு வந்துவிட்டது.

நைஜீரியா

நைஜீரியா

இதற்கிடையே இப்போது மற்றொரு நாடும் பணமதிப்பு நீக்கத்தை முயன்றுள்ளது.. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடான நைஜீரியா தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அங்குப் புழக்கத்தில் இருக்கும் 200, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மேலும், பணவீக்கமும் உச்சத்தில் இருக்கிறது. ஊழலும் பணவீக்கமும் எல்லை மீறிச் சென்றுள்ள நிலையில், அந்நாட்டு அரசு பணமதிப்பு நீக்க முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

 பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

நாளை, வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாற்றிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. நாளைக்குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவில்லை என்றால்.. ரூபாய் நோட்டுகள் செல்லாது.. இதன் காரணமாக நைஜீரியா மக்கள் வங்கிகளை முற்றுகையிட்டுள்ளனர். தாங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் செல்லாததாகிவிடக் கூடாது என்பதால் இரவு கொட்டும் பணியிலும் நைஜீரிய மக்கள் வங்கி வாசலில் நிற்கிறார்கள். வங்கி அல்லது ஏடிஎம்களில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

 திணறும் நைஜீரியா

திணறும் நைஜீரியா

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இன்னும் பெரியளவில் இணையச் சேவை சென்று சேரவில்லை.. எனவே, அங்கு இன்னுமே நோட்டுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள பெரும்பாலான இடங்களில் நோட்டுகள் கொடுத்தே எந்தவொரு பொருளையும் வாங்க முடியும். இந்தச் சூழலில் இப்படி திடீரென பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது நைஜீரியாவைத் திணறடித்துள்ளது. அரசின் இந்த முடிவால் குடிமக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரிடம் காசு இருந்தும் உணவைக் கூட வாங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 என்ன காரணம்

என்ன காரணம்

நைஜீரியா பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெரியளவில் இல்லை. இதனால் பெரும்பகுதி தொகை வங்கி நெட்வோர்க்கிற்கு வெளியிலேயே இருந்தது. இதன் காரணமாகவே நைஜீரியாவின் சென்ட்ரல் பாங்க் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்துள்ளது.. இதன் மூலம் அங்கு வங்கி நெட்வோர்கிற்கு வெளியே இருக்கும் 85% தொகையை வங்கி நெட்வோர்கிற்குள் எடுத்து வர முயன்றுள்ளது. புதிய செய்யப்பட்ட நோட்டுகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரியளவில் பணம் எடுக்கவும் வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 பலன் தருமா

பலன் தருமா

இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரமான நைஜீரியாவில் பணமோசடியை கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழல் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அரசின் மீது விரக்தியிலும் கோபத்திலும் உள்ளனர். நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இது நைஜீரிய பொருளாதாரத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாகப் பல முக்கிய துறைகளே இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+