Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது புதிதாக சார்ஸ் - கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நியோ-கோவ் என்பது உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் கிடையாது.. இது முழுக்க முழுக்க புதிய வகை சார்ஸ் கோவிட் ஆகும். தற்போது உலகம் முழுக்க பரவி வரும் கோவிட் 19 என்பது சார்ஸ் - கோவிட் குடும்பத்தின் ஒரு வகையாகும்.

சார்ஸ் - கோவிட் வைரஸில் பல பிரிவுகள் உள்ளன. 2003-2004ல் பரவியது ஒரு வகையான சார்ஸ் கோவிட் ஆகும். அதேபோல் சார்ஸ் கோவிட் வைரஸின் இன்னொரு வகை 2012ல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது. இதை மெர்ஸ் என்று அழைப்பார்கள்.

சார்ஸ் கோவிட்

சார்ஸ் கோவிட்

ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவிய சார்ஸ், மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ், இப்போது உலகம் முழுக்க பரவும் கொரோனா எல்லாம் சார்ஸ் - கோவிட் குடும்பத்தை சேர்ந்ததுதான். எல்லாம் ஒன்றுவிட்ட பங்காளிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் இப்போது மக்கள் இடையே பரவும் கோவிட் 19 எப்படி உருவானது என்ற குழப்பம், கேள்வி உள்ளது. சார்ஸ் வைரஸை எடுத்து அதை உருமாற்றி கோவிட் 19 உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்ற கேள்விகள் உள்ளன.

 நியோ-கோவ்

நியோ-கோவ்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் உருமாற்றம் கிடையாது இது. அதாவது டெல்டா, ஓமிக்ரான் போல இது கொரோனாவின் பரவலால் ஏற்பட்ட உருமாற்றம் கிடையாது. மாறாக சார்ஸ் கோவிட் குடும்பத்தை சேர்ந்த புத்தம் புதிய கொரோனா வகை வைரஸ்தான் நியோ-கோவ். இதை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.

வெளவால்கள்

வெளவால்கள்

இது தொடர்பாக சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நியோ-கோவ் வகை கொரோனாவை கண்டுபிடித்து இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வெளவால்கள் இடையே இந்த நியோ-கோவ் பரவி வருகிறது. ஆனாலும் இது முழுக்க முழுக்க புதிய வைரஸ் என்றும் சொல்ல முடியாது. மெர்ஸ் வகை வைரசுக்கு கொஞ்சம் நெருக்கமானது. மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் பரவலுக்கு இதுவும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.

நியோ-கோவ் பரவுகிறதா?

நியோ-கோவ் பரவுகிறதா?

இந்த நியோ-கோவ் இப்போது மனிதர்களிடம் பரவவில்லை. ஆனால் அதற்கான தூரம் அதிகம் இல்லை. வெளவால்கள் இடையே பரவும் இந்த நியோ-கோவ் விரைவில் மனிதர்களிடமும் பரவலாம். வெவ்வால்கள் மட்டுமின்றி மற்ற சில விலங்குகள் இடையிலும் இது பரவி வருகிறது. இதில் ஒரே ஒரு சின்ன உருமாற்றம் ஏற்பட்டால் போதும் அது மனிதர்களிடம் பரவ தொடங்கிவிடும்.

 உருமாற்றம் ஏற்படுமா?

உருமாற்றம் ஏற்படுமா?

ஆம் இதில் ஒரு உருமாற்றம் ஏற்பட்டால் போதும் PDF-2180-CoV எனப்படும் புதிய வகை நியோ-கோவ் உருவாகும். அது மனிதர்களின் செல்களுக்குள் செல்லும் திறனை பெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். bioRxiv என்ற ஆய்வு பக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த கட்டுரையில், இன்னொரு முக்கியமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் செல்களுக்குள் கொம்புகளை பயன்படுத்தி அங்கேயே உள்ளே நுழையும். ஆனால் இந்த நியோ-கோவ் கொம்புகள் கொஞ்சம் வித்தியாசமானது.

உடலில் இணையுமா?

உடலில் இணையுமா?

உடலில் இருக்கும் ACE2 receptor (Angiotensin-converting enzyme 2 - இது மனித உடலில் காணப்படும் ஒரு வகை மெம்பரின்) உடன் இது வித்தியாசமாக இணையும். அதாவது இது மனித உடலில் இருக்கும் செல்களோடு நியோ-கோவ் வித்தியாசமாக இணையும் திறன் கொண்டது. எனவே இதற்கு எதிராக இம்யூன் தடுப்பு மருந்துகள் வேலை செய்யாது என்றும், ஏற்கனவே நியோ-கோவ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் என்றும் வுஹான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மரணம்

மரணம்

அதாவது கொரோனாவிற்கு வேக்சின் உருவாக்கியதை போல அவ்வளவு எளிதாக நியோ-கோவ் வந்தால் தடுத்து விட முடியாது. மெர்ஸ் கோவிட் மற்றும் கோவிட் 19 இரண்டின் குணமும் இதில் உள்ளது. நியோ-கோவ் என்பது கோவிட் 19 போல வேகமாக பரவும், அதேபோல் மெர்ஸ் கோவிட் போல அதிக மரணங்களை ஏற்படுத்தும். அதாவது வேகமாக பரவ கூடிய நியோ-கோவ் மனிதர்களிடம் வந்தால் பாதிக்கப்படும் 3ல் ஒருவர் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்
     வுஹான் எச்சரிக்கை

    வுஹான் எச்சரிக்கை

    அதாவது பல பலியாகலாம் என்று வுஹான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போது இது மனிதர்களிடம் பரவவில்லை என்பதே ஒரு நல்ல செய்தியாகும். இப்போது வெளவால்கள் இடையே மட்டுமே பரவுகிறது. வேறு சில விலங்குகளிடமும் இந்த நியோ-கோவ் உள்ளது. சின்ன உருமாற்றம் அடைந்தால் கூட இது மனிதர்களிடம் பரவும் திறனை பெறும்.. ஆனால் இப்போது பிரச்சனை இல்லை.. கவனமாக இருக்க வேண்டும், என்று வுஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+