ரொம்பவே "டேஞ்சர்!" 4இல் மூன்று பேர் உயிரிழக்கும் அபாயம்... சீனாவில் பரவும் புதிய லாங்யா வைரஸ்!
பெய்ஜிங்: கொரோனா பாதிப்பை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அங்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெய்ஜிங்: கொரோனா பாதிப்பை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அங்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசே இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. உலக நாடுகளிடையே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லி மாளாது.
இதற்கிடையே உலகின் பல நாடுகளில் இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

புதிய வைரஸ் பாதிப்பு
இப்படி அடுத்தடுத்து நமக்கு நோய் பரவல் பீதியைக் கிளப்பி வரும் நிலையில், சீனாவில் புதியதொரு வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. லாங்யா ஹெனிபா வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் சீனாவில் மொத்தம் 35 பேருக்கு உறுதியாகி உள்ளது. சீனாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணங்களான ஷான்டாங் மற்றும் ஹெனானில் 2018இல் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள்
கிழக்கு சீனாவில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளிடையே தான் இந்த வைரஸ் அதிகமாகப் பரவி உள்ளது. சோர்வு, இருமல், பசியின்மை மற்றும் வலிப்பு இந்த வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இன்னும் சிலரின் ரத்த அணுக்களின் சில அசாதாரண பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகளையும் சிலருக்கு ஏற்பட்டு உள்ளது.

விலங்கிடம் இருந்து
நல்வாய்ப்பாக இந்த புதிய வைரஸால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜூனோசிஸ் எனப்படும் செயல்பாட்டின்படி இந்த வைரசும் கொரோனாவை போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Threw எனப்படும் ஒரு வகையான எலிகளிடம் இருந்து இது பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் 2 சதவீத வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளிலும் 5 சதவீத நாய்களிலும் கண்டறியப்பட்டது. ஹெனிபாவைரஸ் வைரசின் ஒரு பகுதி தான் இந்த லாங்யா வைரஸ் ஆகும். இது ஒற்றை இழை RNA மரபணுவைக் கொண்டுள்ளது.

எப்படிப் பரவுகிறது
சமீப காலமாகவே உலகில் ஜூனோசிஸ் மூலம் வைரஸ் பரவல் ஏற்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரசும் கூட இப்படித்தான் பரவி இருக்கும் என்றே சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த வைரஸ் எப்படிப் பரவும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. வரும் நாட்களில் சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறதா என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

உயிரிழப்புகள்
இந்த வைரஸ் காரணமாக இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் கூட, இது லெவல் 4 வைரசாகவே வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் 40-75% வரை உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. அதாவது வைரசால் பாதிக்கப்படுவோரில் 4இல் மூன்று பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை வேக்சின் கண்டறியப்படவில்லை என்பதால் இது கொரோனாவை போலப் பரவினால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications