"நட்பு நாடு.." உள்ளே வந்த சீன உளவு கப்பல்.. கூலாக விளக்கம் தந்த மாலத்தீவு.. அப்போ இந்தியா? பகீர்
மாலத்தீவு: சீன கப்பல் திடீரென மாலத்தீவுக்குச் சென்றுள்ளது இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மாலத்தீவு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முய்ஸு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

இதன் காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி குறித்து கருத்துகளைக் கூறியிருந்தார்.
மாலத்தீவு: இதற்கிடையே மாலத்தீவில் உள்ள இந்தியப் படைகளும் வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார். இதுவும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பாதித்தது..
இந்தச் சூழலில் புவிசார் அரசியலில் முக்கிய நாடான மாலத்தீவுக்குச் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 சென்றுள்ளது. இதைச் சீனா சாதாரண ஆய்வு கப்பல் என்று சொல்கிறது. இருப்பினும், இதற்கு உளவு பார்க்கும் திறன்கள் இருப்பதாக உலக நாடுகள் கூறுகின்றனர். மாலத்தீவில் இருந்தபடி இந்தியாவைச் சீனா எளிதாக உளவு பார்க்க முடியும் என்பதாலேயே இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சீனா: இதற்கிடையே சீன உளவு கப்பலான சியாங் யாங் ஹாங் 3 மாலத்தீவுக்கு வந்துள்ளதை அந்நாட்டுக் கப்பல் துறை உறுதி செய்துள்ளது. மேலும், அந்நாட்டு அரசு இது தொடர்பாக சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
நோட் பண்ணுங்க: கப்பல் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியில் அமர்த்துவது, எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சீனா முறையாகக் கோரிக்கை விடுத்ததாக மாலத்தீவு தெரிவித்துள்ளது. எப்போதும் நட்பு நாடுகளின் கப்பல்களை வரவேற்கும் இடமாகவே மாலத்தீவு இருந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துறைமுகத்திற்கு நுழையத் தேவையான கோரிக்கையைச் சீன அரசு மாலத்தீவு அரசிடம் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு தான் இலங்கையில் இதேபோல சீனா உளவு கப்பல் வந்தது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் சீன கப்பல் கடந்த ஆண்டு வந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு சீனா உறவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான். மாலத்தீவு அதிபர் முய்ஸு சமீபத்தில் தான் சீனாவுக்குச் சென்று திரும்பினார். இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை அதிகரிக்க மாலத்தீவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தச் சீனா திட்டம் போடுகிறது. அதற்கான துருப்புச்சீட்டாக மாலத்தீவைச் சீனா பயன்படுத்துகிறது. சீனாவுக்குச் செல்லும் எண்ணெய்யில் சுமார் 80 சதவிகிதம் மாலத்தீவு அருகே தான் செல்கிறது. இதன் காரணமாகவே மாலத்தீவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா விரும்புகிறது.












Click it and Unblock the Notifications