உக்ரைன் போர்.. ரஷ்யா அவ்வளவு தான் போல! புதினுக்கு இருக்கும் வழி என்ன! ஓராண்டாக போர் தொடர காரணம் என்ன
உக்ரைன் போர் ஓராண்டாகத் தொடர என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
மாஸ்கோ: உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிக்கும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. போர் நீட்டிக்க என்ன காரணம், அதிபர் புதின் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன என்பதைப் பார்க்கலாம்.
கடந்தாண்டு இதே நாள் ரஷ்யாவின் நடவடிக்கையைப் பார்த்து உலக நாடுகளே ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டன. உக்ரைன் எல்லையில் ரஷ்யா செய்வதைப் பார்த்து உலக நாடுகளால் நம்பவே முடியவில்லை.
இந்த 21ஆம் நூற்றாண்டில் ரஷ்யா போன்ற ஒரு பெரிய நாடு, போரை ஆரம்பித்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இப்போது ஓராண்டு நெருங்கும் நிலையில், போர் இன்னுமே முடியவில்லை..

என்ன காரணம்
உக்ரைன் ரஷ்யா எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது.. உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் நெருக்கம் காட்டி வந்தது. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் கூட இணையப் பெரியளவில் ஆர்வம் காட்டியது. இது ரஷ்யாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், நேட்டோ படைகள் உக்ரைனில் இருக்கும் ரஷ்ய எல்லைக்கே வந்துவிடும். இது அந்நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறது ரஷ்யா. இதுவே போர் ஆரம்பிக்க முதல் காரணம்.

ரஷ்யா
இதனால் உக்ரைன் எல்லையில் சில ஆண்டுகளாகவே ரஷ்யா ராணுவத்தை குவித்து வந்தது. எல்லையில் போர்ப் பயிற்சிகளைச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையிலும் இறங்கின. இதனால் அங்கு எல்லையில் பதற்றமான சூழலே நிலவி வந்தது. இந்நிலையில், கடந்தாண்டு இதே நாளில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்யா முதலில் இருந்தே இதைப் போர் எனக் குறிப்பிடவில்லை. தங்கள் நாட்டை காக்கும் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த போர் ஆரம்பித்த போது, ரஷ்யா எளிதாக வென்றுவிடும் என்றே பலரும் நினைத்தனர்.

ஓராண்டாகத் தொடரும் போர்
முதலில் போரில் ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும், உக்ரைன் துணிச்சலுடன் போராடியது. உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மேலும், பல அதிநவீன ஆயுதங்களையும் வழங்கின. மேற்குலக ஆயுதங்கள் உக்ரைனுக்கு வலுவை சேர்த்தது. இதனால் ஒரு கட்டத்தில் ரஷ்யா தான் கைப்பற்றிய இடங்களையே விட்டுவிட்டுப் பின்வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. உக்ரைன் தான் இழந்த பகுதிகளை வரிசையாக மீட்டது. இப்படியே போர் ஓராண்டாகத் தொடர்கிறது.

ரஷ்யாவுக்கு மோசம்
ரஷ்யாவுக்கு இந்தப் போர் மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா இந்தளவுக்குத் திணறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சர்வதேச அரங்கிலும் கூட பெலாரஸ், வட கொரியா, சிரியா மற்றும் எரித்திரியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரித்தன. மற்ற சீன கூடப் பட்டும் படாமலேயே இருந்துவிட்டது. மற்ற உலக நாடுகள் ஒன்று ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இல்லையென்றால் நடுநிலை நிலையை எடுத்துள்ளன. இந்த போரால் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வரவே பல உலக நாடுகள் முயல்கின்றன. இருப்பினும், அதற்கு பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.

97% ராணுவம்
கிட்டதட்ட ரஷ்யாவின் முழு ராணுவமும் இப்போது உக்ரைனில் தான் இருக்கிறது. இருப்பினும், அவர்களால் வெல்ல முடியவில்லை. இது தொடர்பாகப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் அளித்த பேட்டியில், "இது ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது 97% ரஷ்ய ராணுவம் உக்ரைனில் தான் இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யாவைத் தோற்கடிப்பது என்பது நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்.. 97% ரஷ்ய ராணுவம் இருந்தும் ரஷ்யாவால் வெல்ல முடியாதது பெரிய பிரச்சினையைக் காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

என்ன பிரச்சினை
ரஷ்யா தனது படைகளை அவசர அவசரமாகத் திரட்டி களமிறக்குகிறது. பல பகுதிகளில் ஓரிரு வாரப் பயிற்சியுடன் வீரர்களை ரஷ்யா களத்திற்கு அனுப்புகிறது. இதன் காரணமாகவே ரஷ்யாவால் போரில் முன்னேற முடியவில்லை. ரஷ்யா அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ளவும் இது முக்கிய காரணமாக இருக்கிறது. இருப்பினும், இந்த அதிக உயிரிழப்புகளை பார்த்தெல்லாம் ரஷ்யத் தலைவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து ராணுவத்தை இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், போதிய பயிற்சி இல்லை என்பதால் அது பலனைத் தரவில்லை.

உடல்நிலை
அடுத்து புதின் உடல்நிலை குறித்தும் சர்ச்சைக்குரிய தகவல்களே வெளியாகி வருகிறது.. புதினுக்கு கேன்சர் உள்ளிட்ட மோசமான பாதிப்பு இருப்பதாகவும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படித் தொடர் சிகிச்சையில் இருப்பதால்.. புதினால் உக்ரைன் போர் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் முன்பை போல முழு கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது மற்றொரு பின்னடைவாகவே இருக்கிறது.

புதினுக்கு இருக்கும் வழி
ரஷ்ய அதிபர் புதின் முன்பு இப்போது ஓரிரு ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. ஒன்று மிகப் பெரிய ராணுவ தாக்குதலை நடத்துவது இல்லது உக்ரைனை முற்றிலுமாக முடக்கும் வகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அணுமின் நிலையங்களில் தாக்குதல் நடத்துவது. இப்படி அழுத்தத்தைக் கொடுத்து உக்ரைனை சரணடைய வைக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கை மேற்குலக நாடுகளை மேலும் ஆத்திரமடைய வைக்கும். நடுநிலையாக இருக்கும் நாடுகளைக் கூட எதிராக மாற்றும் அபாயம் உள்ளது.

வாய்ப்பு குறைவு
உக்ரைன் போர் இப்போது இரண்டாம் ஆண்டில் நுழையும் நிலையில், புதின் விரும்பும் ராணுவ வெற்றி என்பதற்கான வாய்ப்புகள் மங்கி வருகின்றன. வரவிருக்கும் மாதங்களில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து மோசமடையவே செய்யும். இதனால் போரை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. ஆனால், இந்த நேரத்தில் போரை நிறுத்துவது என்பது உக்ரைனுக்கு வெற்றியைப் போலவும் ரஷ்யாவுக்கு, குறிப்பாக புதினுக்கு மிகத் தோல்வி என்பதைப் போல கட்டமைக்கப்படும்.. இதன் காரணமாகவே இடியப்ப சிக்கலில் சிக்கியுள்ளது உக்ரைன் போர்!
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications