"அவங்க பிளானே வேற.." எல்லையில் வாலாட்டும் சீனா.. இந்தியா மாஸ் பதிலடி! சீன அடாவடிக்கு காரணமே வேற
பெய்ஜிங்: சீனாவில் உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்து வருகிறது. ஜி ஜின்பிங் எதிராகவும் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளது. சரியாக இந்த நேரத்தில் எல்லையில் இந்தியப் படைகளுடன் சீனா மோதியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் அந்நாட்டு அரசுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. முதலில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குப் போராட்டம் நடத்தப்பட்டது. இது பெரியளவில் செல்லவில்லை.
அதேரநேம் சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த ஜீரோ கோவிட் கொள்கை வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சீனா
இதை ஜி ஜின்பிங் அரசு எதிர்பார்க்கவில்லை. முதலில் சில நாட்கள் போராட்டம் நடத்திவிட்டுக் கூட்டும் கலைந்துவிடும் என்றே அவர் நினைத்தார். இருப்பினும், அது நடக்கவில்லை. போராட்டம் தொடர்ந்த நிலையில், மக்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர், சீனப் பொருளாதாரம் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஜி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் எல்லா தரப்பில் இருந்தும் ஜி ஜின்பிங்கிற்கு அழுத்தம் அதிகரித்தது.

அழுத்தம்
ஏற்கனவே, சீனாவின் ரியஸ் எஸ்டேட் மார்கெட் பெரிய சிக்கலில் உள்ளது. அதேபோல வங்கிகளும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பொதுமக்களின் கோபம் அனைத்தும் ஜி ஜின்பிங் எதிராகத் திரும்பியது. 1989இல் தியனன்மென் போராட்டம் அளவுக்கு இல்லை என்றாலும் கூட இப்போது ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் அதிகப்படியாகத் திரண்டுள்ளனர். இதுவே கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களாக வெளிவந்தன. இதனால் அதிருப்தியாளர்களை ஒடுக்கச் சீன ராணுவம் தயாராகி வருகிறது.

போராட்டம்
சீனா தலைமை மற்றும் ராணுவத்திற்கு இது சற்று கவலையைத் தான் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அங்கு நடைபெற்றும் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்படுகின்றன. சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் அதைத் தாண்டி இவர்களால் வெற்றிகரமாக போராட்டங்களை நடத்த முடிகிறது. சீன அரசின் கட்டுப்பாடுகளைத் தாண்டி அவர்களால் தகவல்களையும் எளிதாகப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இப்படி உள்நாட்டில் தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், சீனா எப்படியாவது இதைத் திசைதிருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.

திசை திருப்பும் முயற்சி
இதன் காரணமாகவே மக்கள் போராட்டத்தைத் திசை திருப்பும் வகையில் எல்லையில் பிரச்சினை செய்துள்ளது சீனா. அருணாசல் எல்லையில் தவாங்கில் உள்ளே புகுந்து அத்துமீற முயன்றுள்ளது சீனா. இருப்பினும், இந்தியப் படைகளால் இது உடனடியாக முறியடிக்கப்பட்டது.. இந்திய ராணுவம் இந்தளவுக்குத் தயாராக இருக்கும் என்று உண்மையில் சீனா எதிர்பார்க்கவில்லை. இந்தியா பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை என்றும் சுமார் 300-400 சீன வீரர்களை இந்தியா திரும்பி அனுப்பியுள்ளதாகவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

காரணம் இதுதான்
உள்நாட்டில் அதிகரிக்கும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையிலேயே சீனா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வரும் 2022 முதல் 2027 வரையிலான இந்தியாவின் தனிநபர் வளர்ச்சி விகிதம் சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் சீனா எல்லையில் மீண்டும் அத்துமீறியுள்ளது. உள்நாட்டில் அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அதைச் சமாளிக்கும் ஒரு யுக்தியாகவே இந்தத் தாக்குதலைச் சீனா நடத்தியுள்ளது.

எதிர்பார்க்காத சீனா
இருப்பினும், தக்க நேரத்தில் இந்தியப் படைகள் அளித்த பதிலடியால் சீனா ராணுவம் பின்வாங்கிவிட்டது. இது சீனாவை எப்போதும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகக் கருத முடியாது என்பதையே காட்டுகிறது. வரும் காலத்தில் மீண்டும் வேறு ஒரு காரணத்திற்காகச் சீனா திடீரென இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட முயலவும் வாய்ப்புகள் அதிகம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார். எனவே, சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து உட்கட்டமைப்பை அதிகரித்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் கருத்தாக உள்ளது.

ஜி ஜின்பிங்
சீனாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதுவே போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது சுலபம். அதற்கு உரிமையும் கூட உள்ளது. ஆனால், ஒற்றை ஆட்சி முறை உள்ள சீனாவில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை.. அதையும் தாண்டி இந்த போராட்டம் சீனாவில் பரவி வருகிறது. இதைச் சமாளிக்கவே இப்போது எல்லை பக்கம் திரும்பியுள்ளது சீனா.












Click it and Unblock the Notifications