Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூழ்ந்த போர்மேகம்.. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சனை? 18 ஆண்டு ரத்த சரித்திரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: நீண்டகால மோதலுக்கு நடுவே இஸ்ரேல் மீது இன்று காலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு 5 ஆயிரம் ஏவுகணைகளை தாக்கியுள்ளது. இதனால் போர் நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இருதரப்புக்கும் இடையேயான மோதலுக்கு காரணம் என்ன? என்பது உள்பட முக்கிய பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். மொத்தம் 5 ஆயிரம் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது.

What is the reason behind the Israel-Palestine conflict in Gaza? details here

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. ‛ஸ்டேட் ஆப் வார்' அதாவது போர் நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து ராணுவ விமானங்கள் மூலம் இஸ்ரேல் காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது.

இதனால் நீண்டகாலமாக இருந்து வந்த மோதல் என்பது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் சூழலாக மாறி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே போர் மேகங்கள் சூழ்வதன் பின்னணியில் குறித்த விரிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் என்பது காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்சனைக்கு முக்கிய காரணம். இந்த பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிராவதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை மீட்க இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் முயற்சித்து வருவதாகவும், காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மறுத்து வருகிறது. இந்த ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு வழங்குவதாக கூறபப்டுகிறது. இருவருக்கும் இடையேயான இதுதான் மோதலின் தொடக்கப்புள்ளியாகும்.

இந்த மோதல் என்பது கடந்த 2005ம் ஆண்டு தொடங்கியது. அப்போது தான் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. 2.3 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்கள் வசிக்கும் காசா பகுதியில் பாலஸ்தீனியர்களின் இனக்குழுவின் ஆதிக்கம் அதிகரித்தது. அதன்பிறகு 2006 ஜனவரி 25ல் பாலஸ்தீன சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஹமாஸ் எனும் இஸ்லாமிய இனக்குழு அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். அதன்பிறகு அவர்கள் வன்முறையில் ஈடுபட முயன்றனர். காசாவுக்கும் இஸ்ரேலை அனுமதிக்க மறுத்தனர். இது இருதரப்புக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வேளையில் ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் தீவிரவாதியாக அறிவித்தது.

அதன்பிறகு 2006 ஜூன் 25ல் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து எல்லை தாண்டிய இஸ்ரேலின் ராணுவ உயரதிகாரியான கிலாட் ஷாலிட்டை பிணைக்கைதியாக பிடித்து சென்றனர். இது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு வழிவகுத்தது. இறுதியாக 5 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் வலுத்தது.

இதையடுத்து 2008 டிசம்பர் 27ம் தேதி தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் 22 நாள் காசாவில் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 2012 நவம்பர் 14ல் ஹமாஸின் இராணுவ தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொன்றது.

இதைத்தொடர்ந்து 2014 ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் ஹமாஸ் தீவிரவாதிகளால் 3 இஸ்ரேல் நாட்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து 7 வாரம் போர் நடந்தது. இதில் காசாவில் 2,100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 67 ராணுவத்தினர் உள்பட 73 இஸ்ரேலியர்கள் பலியானர்கள். பிறகு 2021ல் முஸ்லிம் நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் பதற்றம் நிலவியது. ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளுடன் மோதல் நடந்தது. இதில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

இதற்கு பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 2022 ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேலில் ராணுவம் அகதிகள் முகாமை தாக்கி 7 பாலஸ்தீனியர்களை கொன்றது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் தான் இந்த மாதத்தில் இருந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இன்று போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+