மொத்தமாக முடங்கிய ஐரோப்பிய நாடுகள்.. வரலாறு காணாத மின்தடைக்கு என்ன காரணம்! வெளியான தகவல்
மாட்ரிட்: ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் மின்சாரச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக முடங்கியுள்ள சூழலில், மின்வெட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மின்சாரச் சேவை சீராக மேலும் பல மணி நேரம் ஆகும் என்றும் தெரிகிறது.
உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் கருதப்படுகிறது. பணக்கார நாடுகள், மக்கள் நிம்மதியாக இருக்கும் நாடுகள், தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் நாடுகள் என அனைத்திலும் ஐரோப்பிய நாடுகளே முதன்மையாக இருக்கும். அங்கு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாபெரும் மின்வெட்டு
இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இப்போது அப்படியொரு சம்பவம் தான் ஐரோப்பாவில் நடந்துள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்சின் பல பகுதிகளில் இன்று மிகப் பெரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய மின்வெட்டாக இது இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் மின்வெட்டு காரணமாக மொபைல் நெட்வொர்க் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளும் முடங்கியுள்ளன. இதனால் பணம் எடுப்பது முதல் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்வது வரை எதையும் மக்களால் செய்ய முடியவில்லை. ஸ்பெயின் நாட்டில் மின்வெட்டு காரணமாக மாட்ரிட்டின் பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர ஸ்பெயினில் பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் மொத்தமாகவும் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக முடங்கிய ஐரோப்பிய நாடுகள்
மேலும், பல பகுதிகளில் ரயில்களும் சுரங்கப் பாதைகளில் சிக்கிக் கொண்டதாம். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினின் நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதை போர்ச்சுக்கல் போலீசார் உறுதி செய்துள்ளனர். போர்டோ மற்றும் லிஸ்பன் நகரங்களில் மெட்ரோ சேவை முடங்கியுள்ளது. மேலும், அங்குப் பல முக்கிய நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களும் கூட செயல்படாமல் போய்விட்டதாம்.
நிலைமை மிக மோசமாகப் போய்க் கொண்டு இருக்கும் சூழலில் ஸ்பெயின் அரசு அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மேலும், நிலைமை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டிலும் கூட மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன காரணம்?
இந்த மெகா மின்வெட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதிகளில் நிலவும் அதீத வானிலையே மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது அங்கு ஏற்பட்ட திடீர் தீவிர வெப்ப மாறுபாடுகள் ஓர் அரிதான வளிமண்டல நிகழ்வை உருவாக்கியுள்ளதாகவும் அதுவே மின்வெட்டுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், தென்மேற்கு பிரான்சில் உள்ள அலரிக் மலையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெர்பிக்னான் மற்றும் கிழக்கு நார்போன் இடையேயான உயர் மின்னழுத்த கேபிளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பவர் கிரிட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதுவும் கூட மின்வெட்டு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
எப்போது சீராகும்?
மின்வெட்டைச் சரி செய்யும் பணிகளில் பல்வேறு ஊழியர்களும் இறங்கியுள்ளனர். பவர் லைனில் எங்குப் பாதிப்பு என்பதைக் கண்டறிந்து, அதைச் சரி செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மின்சாரம் சப்ளை சீராக 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications