"அந்தரங்க உறுப்பில் பூட்டு.." பிரேக்அப் ஆனதால் சாவியை தர மறுத்த காதலி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
பார்சிலோனா: பிரேக் அப் காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் பல மாதங்களாக அந்தரங்க உறுப்பில் பூட்டுடன் சுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அதாவது ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டது என்றால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அது சரியா.. இல்லை தவறா என்றெல்லாம் அப்போது யோசிக்க மாட்டோம்.
அப்படிதான் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் பெண் ஒருவரை டேட் செய்து வந்துள்ளார். டேட் செய்ய ஆரம்பித்த சமயத்தில் ஒரு வேகத்தில் அவர் செய்த காரியம், அவருக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விட்டது.

என்ன நடந்தது: ஸ்பெயின் பார்சிலோனா பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் நெருக்குமாக இருக்கும் போது விளையாட ஒரு வித பூட்டை வாங்கி வந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகும் போது, தனது அந்தரங்க உறுப்பை அவர் அந்த பூட்டை வைத்துப் பூட்டியுள்ளார். சாவியை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டாராம். இருவரும் நெருக்கமாக இருக்கும் போது மட்டும் அந்த பெண் சாவியைப் போட்டுத் திறப்பாராம். எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் பூட்டிவிடுவார். இதேபோல சில காலம் அவர்கள் தொடர்ந்து செய்துள்ளனர்.
இதற்கிடையே மூன்று மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இருப்பினும், ஆணுறுப்பை லாக் செய்த சாவியுடன் அந்த பெண் சென்றுவிட்டார். சாவியை அந்த ஆண் எவ்வளவோ முறை கேட்டும் கூட அந்தப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். தானாகவே அந்த லாக்கை திறக்கவும் முயன்றுள்ளார். இருப்பினும், அது அவரால் முடியவில்லை.
அந்தரங்க உறுப்பு: இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த அந்த இளைஞர், டேட்டு ஆர்டிஸ்டிடம் சென்றுள்ளார். அந்த டேட்டூ ஆர்டிஸ்ட் அங்கே என்ன நடந்தது என்பதைத் தனது டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆணின் முகம் மற்றும் பெயரை அவர் காட்டவில்லை. அந்த லாக் எப்படி இருக்கிறது, அதை அகற்ற அவர் எடுக்கப்பட்ட முயற்சியை மட்டும் விளக்கியுள்ளார்.
நீண்ட காலமாக அந்தரங்கப் பகுதியைச் சுற்றிப் பூட்டு இருந்ததால் அந்த பூட்டு துருப்பிடித்துப் போய் இருக்கிறது. மோசமான சூழலில் மாட்டிய அவரை மீட்கத் துணிச்சலான அதே நேரம் கவனமான நடவடிக்கை தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

பூட்டுடன் வாழ்க்கை: தனது காதலி தனது அந்தரங்க உறுப்பைப் பூட்டி விட்டுச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் எத்தனையோ முறை தொடர்பு கொண்டும் சாவி தர மறுத்துவிட்டதால் அப்படியே வாழ ஆரம்பித்துள்ளார். குளிப்பது, முதல் டாய்லெட் வரை எல்லாம் அப்படியே செய்துள்ளார். இதன் காரணமாகவே இந்த பூட்டு துருப்பிடித்துள்ளது
பிரேக் ஆப்பிற்கு சில மாதங்களுக்குப் பிறகு அவரது காதலி பூட்டின் சாவியை கொடுத்ததாகவும் இருப்பினும், அதற்குள் துரு பிடித்துவிட்டதால் ஓபன் செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.. பூட்டு மிகவும் துருப்பிடித்திருந்தது, சாவியால் உள்ளே கூட செல்ல முடியவில்லை. டாட்டூ ஆர்டிஸ்ட் லா டுர்டா தனது நண்பர் அலெக்ஸின் உதவியுடன் சுத்தியலை வைத்து அடித்து அந்த லாக்கை ஓபன் செய்துள்ளார். அந்த பூட்டின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால்.. ஆச்சரியத்திற்குத் தயாராக இருங்கள். ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை இல்லையாம். ஏற்கனவே பல முறை இப்படி அந்தரங்க பகுதியில் பூட்டுடன் பலர் வந்துள்ளனர் என கூலாக சொல்கிறார் டாட்டூ ஆர்டிஸ்ட் லா டுர்டா..!
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications