"ஆபாச படம்.." பாதிரியார்கள் கூட பார்க்கிறார்கள்.. உடனே டெலிட் பண்ணுங்க! போப் ஆண்டவர் ஸ்ட்ரிக்ட்
வாடிகன்: வாடிகனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ் ஆபாசப் படங்கள் தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
கிறிஸ்தவ மதத்தின் தலைநகராக ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் அதுதான் கிறிஸ்தவ மதத்தின் தலைநகராகக் கருதப்படுகிறது.
இதனிடையே போப் பிரான்சிஸ் நேற்று கூறிய சில கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஆபாசப் படங்கள் தொடர்பாக அவர் திடீரென பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

போப் ஆண்டவர்
கடந்த புதன்கிழமை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இங்குப் பலருக்கும் ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருப்பதாகக் கூறினார். அவ்வளவு ஏன் பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது வேதனை என்று கூறிய அவர், அனைவரும் அடல்ட் செயலிகளில் தங்கள் ஃபோனில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆபாச படங்கள்
போப் பிரான்சிஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொபைல் பயன்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. உலகில் பல கோடி பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. இது மிகவும் தீய பழக்கமாகும். அவ்வளவு ஏன் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.

எல்லாமே தப்பு தான்
மொபைல் உள்ளிட்ட சாதனங்களை நமது வளர்ச்சிக்காக பாசிட்டிவ் முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த டிஜிட்டல் ஆபாசம் தொடர்பாகப் பலருக்கும் பல விதமாகக் கேள்விகள் இருக்கலாம். பல சாமானியர்கள், சாதாரண பெண்கள், அவ்வளவு ஏன் பாதிரியார்களுக்கும் கூட இது ஒரு தீமையாகவே உள்ளது. நான் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் கிரிமினல் ஆபாசப் படங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை.

டெலிட் பண்ணுங்க
மைனர்களை பயன்படுத்தும் ஆபாசப் படங்கள் ஏற்கனவே சட்டப்படி தவறு. அதைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நான் வழக்கமான ஆபாசப் படங்களைச் சேர்த்தும் தான் சொல்கிறேன். யாரும் தங்கள் மொபைலில் ஆபாசப் படங்களை வைத்து இருக்கக் கூடாது. உடனடியாக ஆபாசப் படங்களை டெலிட் செய்து விடுங்கள். அப்போது தான் எந்தவொரு சலனமும் ஏற்படாது. ஆன்லைனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் பல ஆபத்துகள் ஏற்படுகிறது.

பலவீனப்படுத்தும்
அது நமது இதயத்தைப் பலவீனப்படுத்துகிறது.. நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆபாசப் படங்களைப் பார்ப்பது நமது ஆன்மாவையும் சேர்த்துப் பலவீனப்படுத்துகிறது. இதன் மூலம் தீய சக்திகள் நமக்குள் நுழைகிறது.. இது நமது இதயத்தையும் சேர்த்தே பலவீனப்படுத்துகிறது. இயேசு நமக்கு கொடுத்துள்ள தூய்மையான இதயம் இந்த ஆபாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.

மொபைல் பயன்பாடு
தொடர்ந்து மொபைல் பயன்பாடு குறித்துப் பேசிய அவர், "அதிக நேரத்தை வீணடிக்கவில்லை என்றால் மொபைல் அல்லது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன் நான் பிஷப் ஆனபோது முதலில் எனக்கு மொபைல் கொடுத்தார்கள். அது செங்கல் அளவுக்கு இருக்கும். அப்போது அதை வைத்து நான் எனது தங்கைக்கு மட்டும் ஒரு முறை மட்டுமே ஃபோன் செய்தேன்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications