சிரிக்கும் இஸ்ரேல், அமெரிக்கா.. ஈரான் அதிபர் மரணத்தால் இனி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? போச்சு
டெஹ்ரான்; ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஈரான் நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர்.
என்ன நடந்தது?: ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே, தெளிவற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கியது. ஆரம்பத்தில், உள்துறை மந்திரி அஹ்மத் வஹிடி, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். ஆனால் இப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இனி என்ன நடக்கும்?: ஈரான் அதிபர் மரணத்தால் பின்வரும் மாற்றங்கள் ஈரான் நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம் பற்றி விசாரணை குழு அமைக்கப்படும். இது விபத்தாக இருக்கும் பட்சத்தில் சிக்கல் இல்லை. அதுவே இது கொலை என்று முடிவாகும் பட்சத்தில் அது மிகப்பெரிய அரசியல் மோதலை ஏற்படுத்தும். கொலைக்கு காரணமானவர்கள் மீதான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும்.
2, இஸ்ரேல் போருக்கு இடையில் இது நடப்பதால் கண்டிப்பாக இஸ்ரேல் மீதான சந்தேகம் எழும். இதற்கான விசாரணை மற்றும் பழிவாங்கும் வேலைகளை ஈரான் ஏற்கனவே எடுக்க தொடங்கி இருக்கும்.
3. ஈரான் ஏற்கனவே சிரியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்று அரபு நாடுகளில் நடக்கும் போர்களில் எல்லாம் கலந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இப்ராஹிம் ரைசி மரணம் அங்கே உள்நாட்டு குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
4. ஈரான் மீதான பொருளாதார தடை ஏற்கனவே உள்ளது. பொருளாதார ரீதியாக அந்த நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படி இருக்க அதிபர் ஒருவரே விபத்தில் மரணம் அடைவது அந்நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும்.
5. இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் வலுவான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கண்டிப்பாக கொண்டாடவே செய்யும். வெளியே இரங்கல் தெரிவித்தாலும் அமெரிக்கா, இஸ்ரேல் இதை கொண்டாடும். இந்த மரணத்தை பயன்படுத்தி ஈரானை முடக்க இஸ்ரேல், அமெரிக்கா முயலும்.
6. பாலஸ்தீன போரில் ஹிஸ்புல்லா படைக்கும், மற்ற பாலஸ்தீன படைகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது ஈரான். ஈரான் அதிபரின் மரணம் காரணமாக இந்த போரில் பாலஸ்தீன ஆதரவு படைகளின் பலம் குறைய வாய்ப்புகள் உள்ளன.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications