வாட்ஸ் அப் குரூப்பில் இனி 256 பேர் உறுப்பினராகலாம் !
கலிபோர்னியா: வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வாட்ஸ் அப் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க 'வாட்ஸ் அப்' குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் ஒரு 'வாட்ஸ் அப்' குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தியது வாட்ஸ் அப். தற்போது, அந்த எண்ணிக்கை 256-ஆக உயர்த்தியுள்ளது 'வாட்ஸ் அப்'.
ஆனால், இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது. ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்பேசிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications