126 பிறந்தநாளைக் கொண்டாடும் “இரும்புப் பெண்” ஈபிள் டவர்- டூடுள் போட்டு மகிழும் கூகுள்!

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் "இரும்பு பெண்" என அழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற "ஈபிள் டவர்" இன்று 126வது ஆண்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

அதனை கூகுள் நிறுவனமும் டூடுள் போட்டு கொண்டாடி வருகின்றது. பலர் இணைந்து ஈபிள் டவரைக் கட்டுவது போன்று இந்த டூடுள் அமைந்துள்ளது.

உலக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள "ஈபிள் டவர்" ஆகும்.

உலக அதிசயம் “ஈபிள் டவர்”:

உலக அதிசயம் “ஈபிள் டவர்”:

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவிற்கு வருகை தரும் மக்கள் இந்த வரலாற்று புகழ்பெற்ற ஈபிள் டவரை காண தவறுவதில்லை. வருடத்திற்கு சுமார் 70 லட்சம் மக்கள் ஈபிள் டவருக்கு வந்து செல்வதாக சமீபத்திய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

இதே நாளில் திறப்பு விழா:

இதே நாளில் திறப்பு விழா:

கடந்த 1889 ஆம் ஆண்டு பாரீசில் உலக கண்காட்சி நடைபெற்ற இதே நாளில் தான் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது. இன்று 126வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் இந்த ஈபிள் டவர் குறித்த சில அரிய தகவல்கள் உள்ளன.

மொத்த கட்டுமான நாட்கள்:

மொத்த கட்டுமான நாட்கள்:

1887 ஆம் ஆண்டு ஈபிள் டவரை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள், 2 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு முடிவு பெற்றது.

மொத்த செலவு:

மொத்த செலவு:

ஈபிள் டவரை முழுவதுமாக வடிவமைக்க அரசிற்கு ஆன ஒட்டு மொத்த செலவு 7,799,401.31 பிரான்ஸ் தங்க பிராங்குகள்.

324 மீட்டர்கள்:

324 மீட்டர்கள்:

ஈபிள் டவரின் ஒட்டுமொத்த உயர 324 மீட்டர்கள் ஆகும். இதில் உச்சத்தில் உள்ள ஆண்டெனா மட்டும் 24 மீட்டர்கள் ஆகும்.

வளரும் ஈபிள் டவர்:

வளரும் ஈபிள் டவர்:

கோடை காலங்களில் ஈபிள் டவர் மீது அதிகப்படியான வெப்பம் பதிவாவதால், இது சுமார் 6 இன்ச் வரை வளர்கிறது. அதேபோல், குளிர்காலங்களில் அதே அளவு சுருங்கவும் செய்கிறது. இந்த மாற்றத்தை வெறும் கண்களால் காண முடியாது.

 10,000 டன் எடை:

10,000 டன் எடை:

ஈபிள் டவரின் ஒட்டு மொத்த எடையானது சரியாக 10 ஆயிரம் டன் ஆகும்.

20 வருடங்கள்:

20 வருடங்கள்:

பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் விதமாகவும், நாட்டின் தொழிற்சாலை துறையின் வலிமையை காட்டவும் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் ஈபிள் டவர் கட்டப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற டவர்:

உலகப் புகழ் பெற்ற டவர்:

20 வருடங்களுக்கு பிறகு, அந்த இடத்தை விட்டு ஈபிள் டவரை நீக்கிவிடும் நோக்கில் கட்டப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஈபிள் டவர் உலகப் பிரபலம் அடைந்ததால், அதை நீக்கும் எண்ணத்தை கைவிட்டனர்.

103,000 கிலோ மீட்டர்கள்:

103,000 கிலோ மீட்டர்கள்:

ஈபிள் டவரின் உட்புறத்திலிருந்து மக்கள் மேல்நோக்கி செல்லும் வகையில் லிப்ட் வசதிகள் உள்ளன. இது மேலும், கீழும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஆண்டில் 1,03,000 கிலோ மீட்டர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

18 முறை வண்ணப்பூச்சுகள்:

18 முறை வண்ணப்பூச்சுகள்:

ஈபிள் டவர் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை அதற்கு 18 முறை வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

 41 வருடங்கள்:

41 வருடங்கள்:

ஈபிள் டவர் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெயருடன் விளங்கியது.

250 மில்லியன் மக்கள்:

250 மில்லியன் மக்கள்:

1889ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 250 மில்லியன் மக்கள் ஈபிள் டவரை நேரடியாக பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர்:

இரண்டாம் உலகப்போர்:

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944 ஆம் ஆண்டில் ஈபிள் டவரை தகர்க்குமாறு பிரான்ஸ் ஆளுனருக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார்.

ஆறிலிருந்து ஏழு மீட்டர்கள்:

ஆறிலிருந்து ஏழு மீட்டர்கள்:

பலமாக வீசும் காற்றில் ஈபிள் டவரின் உச்சிப்பகுதி சுமார் 6 முதல் 7 மீட்டர்கள் வரை முன்னும், பின்னும் நகர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+