என் முதுக்குப் பின்னால் புஸ்ஸென்று மூச்சு விட்டார் டிரம்ப் - ஹில்லாரியின் திகில் அனுபவம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நடந்த விவாதத்தின்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசவுகரியமாக உணர்ந்தேன் என்று ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் தினசரி வெடித்துக் கொண்டேதான் உள்ளன. இந்த நிலையில் அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹில்லாரி கிளிண்டன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹிலாரி தேர்தல் அனுபவம்
What Happened? என்ற தலைப்பில் தனது அதிபர் தேர்தல் பிரசார அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார் ஹில்லாரி. இந்த புத்தகம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த நிலையில் இப்புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆடியோ உரையை வெளியிட்டுள்ளார் ஹில்லாரி.

சுவாரஸ்ய தகவல்
அதில் அவர் கூறியுள்ள சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.செயின்ட் லூயிஸ் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 2வது அதிபர் தேர்தலுக்கான பொது விவாதம் நடந்தது. அது ஒரு குறுகிய மேடை. நான் பேசிக் கொண்டிருந்தேன். டிரம்ப் வெகு அருகே நின்று கொண்டிருந்தார்.

டிரம்ப் மூச்சுக்காற்று
எனக்குப் பின்னால் நின்றிருந்த அவர் என்னையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிய ஒரு சர்ச்சை முதல் நாள்தான் வெடித்திருந்தது. அதுதான் பெண்ணிடம் அத்துமீறியதாக வந்த புகார். அது வேறு ஞாபகத்திற்கு வந்து என்னை நெளிய வைத்தது. எனக்கு கழுத்தில் அவரது மூச்சுக் காற்று பட்டதால் அசூயையாக இருந்தது. நெளிந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு அது பெரும் அசவுகரியமாக இருந்தது.

தர்மசங்கடம்
அந்த மேடையில் நான் எங்கெல்லாம் போய் பேசினேனோ அவரும் என்னைப் பின் தொடர்ந்தபடியே வந்தார். நின்றார். தர்மசங்கடத்தைக் கொடுத்தார். உற்று பார்த்தபடியே இருந்தார். எனது கஷ்டத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.
ஒரு கட்டத்தில் அவரைத் திரும்பிப் பார்த்து என்ன பண்றீங்க, தள்ளிப் போங்க, தள்ளி நில்லுங்க. மற்ற பெண்களைப் போல என்னையும் டீஸ் செய்யலாம் என்று நினைக்காதீர்கள் என்று சத்தமாக கத்திச் சொல்லலாமா என்று கூட நினைத்தேன்.

கை விட்டு விட்டேன்
இது என்னால் மறக்க முடியாத அனுபவம். எனது பிரசாரத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் நான் அவர்களை கைவிட மாட்டேன் என நம்பியிருந்தனர். ஆனால் அவர்களை நான் கைவிட்டு விட்டேன். அது வருத்தமாக இருக்கிறது இப்போதும் கூட என்று கூறியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications