பேட்டிங்கை விடுங்க.. ரோஹித் செஞ்ச பெரிய தவறு! இந்தியா தோல்வி அடைய அந்த ஒரு காரணம்! திங் டேங்க் எங்கே
ரோஹித் சர்மா டாஸ் வென்றும் கூட பவுலிங் செய்யாமல் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது பெரிய தவறு.
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் மிக முக்கியமான காரணம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. இந்தூரில் நடக்கும் இந்த போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக இந்தியா தோல்வி அடைந்து உள்ளது.
ஒரு போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி, இன்னொரு போட்டியில் மிக எளிதாக வெற்றி என்று ஆடிக்கொண்டு இருந்த இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் மூன்றாவது போட்டியில் மோசமாக சொதப்பி தோல்வி அடைந்து உள்ளது. 3 நாட்களில் ஆட்டம் முடிந்த இந்தூர் பிட்ச் மோசமான பிட்ச் என்ற பெயரை எடுக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

பிட்ச்
இந்த போட்டியில் முதல் இன்னிங்சிலேயே இந்திய அணி சொதப்ப தொடங்கிவிட்டது. முதல் இன்னிங்சில் இந்தியா 109-10 ரன்களை மட்டுமே எடுத்தது. இதுவே இந்திய அணிக்கு முதல் அடியாக இருந்தது. அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197-10 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனாலும் இந்திய அணியை விட 88 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணி தற்போது 163 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 78/1 ரன்கள் எடுத்து எளிதாக வென்றுள்ளது.

என்ன தவறு
இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைய பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் விஷயம் டாஸ். ஸ்பின் பிட்ச் என்று தெரிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவை இறங்க சொல்லி அவர்கள் குறைந்த ரன்னில் சுருட்டி அதன்பின் இந்திய அணி இறங்கி இருக்கலாம். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரிந்த பின் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்து இருக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா டாஸ் வென்றும் கூட பவுலிங் செய்யாமல் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது பெரிய தவறு.

மோசமான ஷாட்
அதேபோல் இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மோசமான ஷாட் ஆடினார்கள். முதல் இன்னிங்சில் கோலி, இரண்டாவது இன்னிங்சில் புஜாரா, இரண்டு இன்னிங்சிலும் அக்சர் பட்டேல் தவிர மற்ற எல்லோரும் அதிக அளவு பால்ஸ் ஷாட் கொண்டு இருந்தனர். எந்த விதமான க்ளுவும் இல்லாமல் மைதானத்தில் ஆடுவது போல இருந்தது. பிட்சை கணிக்க முடியாமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் திணறியது, ஸ்விப் ஷாட் ஆடாதது, பிட்சில் கொஞ்சம் இறங்கி ஆடாமல் இறந்தது என்ற அடிப்படையான சில விஷயங்களில் தவறு செய்தது இந்த தோல்விக்கு காரணமாக இருந்தது.

முக்கிய காரணம்
இந்த போட்டியில் தோல்விக்கு மிக முக்கிய காரணம் பேட்டிங் ஆர்டர். ஜடேஜாவை மேலே இறக்கிய ரோஹித் நன்றாக ஆடிக்கொண்டு இருந்த அக்ஸரை கீழே இறக்கினார். இதனால் இரண்டு இன்னிங்சிலும் அக்சர் பட்டேலுடன் கடைசியில் ஆட ஆள் இல்லை. ஸ்பின் பவுலிங்கில் அக்சர் பரத், ஜடேஜாவை விட நன்றாக ஆடுகிறார். அவரை ஷ்ரேயாசுக்கு அடுத்து இறக்கி இருக்க வேண்டும் . ஆனால் ரோஹித் சர்மா - டிராவிட் இந்த முடிவை எடுக்கவில்லை. இதனால் கடைசியில் 9வதாக இறங்கிய அக்ஸருக்கு பார்ட்னராக இருக்க யாரும் இல்லை. இந்தியாவின் திங்க் டேங்க் இப்படி சொதப்பியதும் கூட அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications