உலகின் விலை உயர்ந்த & மலிவான நகரங்கள்.. லிஸ்டில் 2 இந்திய சிட்டிக்கள்.. சென்னைக்கு எந்த இடம் பாருங்க
ஹாங்காங்: உலகின் விலையுயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது இதில் இந்திய நகரங்கள் எங்கே உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எந்த நகரங்களில் வாழ்ந்தால் எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, உலகின் டாப் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

வெறும் லிஸ்டை மட்டும் வெளியிடாமல் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு, உலத பொருளாதாரம் எப்படி இருக்கிறது எது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அதிக செலவாகும் நகரங்கள்: அதன்படி இந்தாண்டு எந்த நகரங்கள் அதிக செலவு வைக்கிறது.. எந்த நகரங்களில் வாழ்ந்தால் குறைந்த செலவு மட்டுமே ஆகிறது என்பது குறித்த விரிவான தகவலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ளது. பொதுவாக விலையுயர்ந்த நகரங்கள் லிஸ்டில் நாம் அமெரிக்க நகரங்கள் டாப் இடத்தில் வரும் என நினைப்போம்.. ஆனால், உண்மையில் இரண்டையும் ஓவர்டேக் செய்து சிங்கப்பூர் மற்றும் சூரிச் நகரங்கள் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜெனிவா மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங் ஆகிய நகரங்கள் 4, 5ஆவது இடங்களில் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரீஸ் (பிரான்ஸ்), கோபன்ஹேகன் (டென்மார்க்), டெல் அவிவ் (இஸ்ரேல்), சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் 6 முதல் 10 வரையிலான இடங்களில் உள்ளன.
செலவுகள்: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அனைத்து நாடுகளும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை என்று எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஒரே ஆண்டில் பொதுமக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்களின் விலை சராசரியாக 7.4% அதிகரித்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு அதிகரித்த 8.1% விடக் குறைவு தான் என்ற போதிலும், 2017-2021 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது கணிசமாக அதிகம் தான்.
ஆசிய நாடுகள்: மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நகரங்களில் வாழ்வதில் குறைவாகவே செலவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ நகரங்களில் ஆகும் செலவு குறைந்துள்ளது. அதேபோல சீன நான்கு முக்கிய நகரங்களான நான்ஜிங், வ்ஸ்ய், டேலியந், பெய்ஜிங் ஆகிய நகரங்களிலும் கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது செலவு குறைந்துள்ளது.
இந்திய நகரங்கள்: மேலும், இந்த சர்வேப்படி சிரியாவின் டமாஸ்கஸ் இந்த ஆண்டு வாழ்வதற்கு மலிவான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரானின் தெஹ்ரான் 2வது இடத்தில் இருக்கும் நிலையில், லிபியாவின் திரிபோலி 3இவது இடத்திலும் இருக்கிறது.
இந்த லிஸ்டில் பாகிஸ்தானின் கராச்சி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் மற்றும் துனிசியாவின் துனிஸ், ஜாம்பியாவின் லூசாகா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த மலிவான நகரங்கள் லிஸ்டில் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகியவை முறையே 8வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications