வெள்ளை மாளிகைக்குள் ஊடுறுவியவரின் காரில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் மீட்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி புகுந்த நபரின் காரைப் பரிசோதித்த போலீஸார் அதில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
பிடிபட்டுள்ள அந்த நபரின் பெயர் உமர் கோன்சாலஸ். இவருக்கு 42 வயதாகிறது. இவரால் அதிபருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, உமர் கோன்சாலஸ் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பைத் தாண்டி உள்ளே புகுந்து போது பாதுகாவலர்களிடம் பிடிபட்டார். அப்போது அவரது காரைப் பரிசோதித்த பாதுகாவலர்கள், அதிலிருந்து 800 ரவுண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
தற்போதைய சம்பவம் நடந்த சமயத்தில் அதிபர் ஒபாமா அங்கு இல்லை. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் அங்கிருந்து போயிருந்தார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் ஈராக்கைச் சேர்ந்த உமர் கோன்சாலஸ் என்று தெரிய வந்தது. இவர் முன்னாள் ராணுவ வீரரும் ஆவார். இவர் வெள்ளை மாளிகையின் வடக்கு புல் வெளிப் பகுதியைத் தாண்டி , பாதுகாப்பு வேலியை தாண்டி கையில் கத்தியுடன் உள்ளே புகுந்துள்ளார்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஜூலை மாதமும் கூட படு வேகமாகக் காரை ஓட்டி வந்ததாக உமரைப் போலீசார் கைது செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அப்போது . அவரது காரில் அப்போது துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாஷிங்டன் நகர மேப்பும் அவரது காரில் அப்போது இருந்துள்ளது.
தொடர்ந்து நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உமர், அதிபரின் உயிரைக் குறி வைத்து வந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு மறு பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications