ஓ மை காட்..மக்களை நடைபிணமாய் மாற்றும் கொடூர ஆயுதம்.. இஸ்ரேல் கையில் வெள்ளை விஷம்! உச்சகட்ட பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், லெபனானில் நடைபெற்றதாக கூறப்படும் புதிய தாக்குதல் குறித்து சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் மிகக் கொடூரமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உலக மனித உரிமை அமைப்புகளின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பாகம் ( Human Rights Watch) லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது வெள்ளை பாஸ்பரஸ் கலந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தகவலின்படி, கடந்த வாரம் 3-ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்த வகை வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்காக புவியியல் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Israel White Phosphorus Lebanon

இஸ்ரேல் லெபனான் மோதல்

குறிப்பாக லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மர் (Yohmor) என்ற நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது வானில் வெள்ளை பாஸ்பரஸ் துகள்கள் பரவியிருந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தீயை அணைக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளை பாஸ்பரஸ் ஆயுதம்

வெள்ளை பாஸ்பரஸ் என்பது மிகவும் ஆபத்தான வேதியியல் தன்மை கொண்ட பொருளாக கருதப்படுகிறது. இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும் போது உடனடியாக தீப்பற்றும் தன்மை கொண்டது. போர் களங்களில் புகை திரை உருவாக்கவும் அல்லது இருள் சூழ்ந்த வானத்தை ஒளிரச் செய்யவும் சில சமயங்களில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளை பாஸ்பரஸ் மனிதர்களுக்கு மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், சுவாசக் கோளாறு, உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற தீவிர விளைவுகளையும் உருவாக்கும்.

மனித உரிமை கண்காணிப்பகம்

மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்தப் பொருள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுவது மிகுந்த ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம்

மேலும், இஸ்ரேல் ராணுவத்திற்கு வெள்ளை பாஸ்பரஸ் கலந்த ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் உடனடியாக அந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத வகையில் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்கனவே பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

சர்வதேச மனிதாபிமான சட்டம்

கடந்த 2024 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், அதன்பிறகும் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக லெபனானில் செயல்பட்டு வரும் ஆயுத அமைப்பான ஹெஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் அந்த எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் லெபனானின் தெற்கு பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+