"சுப்ரீம் லீடர்.." மத்திய கிழக்கை 35 ஆண்டுகள் ஆட்டுவித்த கமேனி உயிரிழந்தார்.. யார் இவர்! பின்னணி
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். யார் இந்த கமேனி இவரது பின்னணி என்ன.. மத்திய கிழக்கு அரசியலை கமேனி எப்படி வடிவமைத்தார் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானின் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் மதத் தலைவராக இருந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார் என ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின. அவரது மறைவு இஸ்லாமியக் குடியரசின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

கமேனி உயிரிழப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கமேனி தனது அலுவலகத்திலேயே காலமானதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அணுசகரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரசியலில் தவிர்க்கவே முடியாத நபராக இருந்த கமேனி யார்.. இவரது பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
யார் இவர்
1939இல் மஷாத் நகரத்தில் பிறந்த கமேனி, 1979ல் நடந்த இஸ்லாமிய புரட்சி காலகட்டத்தில் ஒரு முக்கிய மத பிரமுகராக உருவெடுத்தார். இஸ்ரேலாமிய புரட்சியை அப்போது முன்னின்று நடத்திய கோமெய்னியின் நெருங்கிய கூட்டாளியான கமேனி, ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சியில் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகப் பலமுறை கைது செய்யப்பட்டார். இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் அமைந்த புதிய அரசியல் அவருக்குச் சீக்கிரமே முக்கிய இடம் கிடைத்தது.
1981 முதல் 1989 வரை ஈரான்- ஈராக் போர் உள்ளிட்ட கொந்தளிப்பான காலகட்டங்களில் அவர் ஈரானின் அதிபராக பணியாற்றினார். 1989இல் இஸ்லாமிய புரட்சிக்கு வித்திட்ட கோமெய்னியின் மறைவுக்குப் பிறகு, கமேனி ஈரானின் இரண்டாவது சுப்ரீம் லீடர், அதாவது உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலானதாகும். அரசு எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதை மாற்றி அமைக்கும் அதிகாரம் சுப்ரீம் லீடருக்கு உள்ளது. சுப்ரீம் லீடருக்கு தான் அரசின் மீது இறுதி அதிகாரம் இருக்கிறது.
சுப்ரீம் லீடர்
சுப்ரீம் லீடர் என்ற முறையில் ஈரானின் ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), நீதித்துறை மற்றும் அரசு ஒளிபரப்பு நெட்வொர்க் ஆகியவை நேரடியாக இவரது கண்ட்ரோலில் தான் வரும். மேலும், வெளியுறவுக் கொள்கை மற்றும் அணுசக்தி முடிவுகள் என முக்கியமான விஷயங்களிலும் கமேனிக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களை விட அவரது அதிகாரம் மேலோங்கியது.
மோதல் போக்கு
கமேனியின் பதவிக்காலத்தில் மேற்கத்திய நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன், ஈரான் ஒரு மோதல் போக்கை ஏற்றுக்கொண்டது. அத்துடன், பிராந்திய கூட்டணிகள் மற்றும் மறைமுக நெட்வொர்க் மூலம் மேற்கு ஆசியா முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியது. அவரது தலைமையில், ஈரான் அரசு சாரா ஆயுதக் குழுக்களுடனான உறவுகளைப் பலப்படுத்தியது.
சிரியா, ஈராக், லெபனான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் நடந்த மோதல்களில் ஒரு முக்கிய பங்காற்றி, பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு புவிசார் அரசியலை வடிவமைத்தது. மேற்கத்திய அழுத்தங்கள், பொருளாதாரத் தடைகளைத் தாண்டி கமேனி பல விவகாரங்களில் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
நீண்ட காலம் ஆட்சி செய்தவர்
1989 முதல் அவரது மரணம் வரை உச்ச தலைவராக இருந்த கமேனி, சமகால உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியல் தலைவர்களில் ஒருவராகிறார். அவரது ஆட்சி, ஈரானின் நவீன வரலாற்றில் பல முக்கியமான தருணங்களுக்குச் சாட்சியாக இருந்தது. புரட்சிக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய சக்திகளுடனான அணுசக்தி முரண்பாடுகள் முதல் உள்நாட்டுப் போராட்டங்கள் வரை பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டு இருந்தார்.
அவரது மறைவுடன், ஈரான் ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்கொள்கிறது. நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பதவிக்கு அடுத்து யார் என்பதை வல்லுநர் சபை தீர்மானிக்கவுள்ளது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications