Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐரோப்பாவின் பவர்ஹவுஸ்.. ஜெர்மனி அதிபராகும் வலதுசாரி தலைவர் மெர்ஸ்.. யார் இவர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் இப்போது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வலதுசாரி கட்சியான சிடிஎஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறித்த நேரத்தில் தேவையான கூட்டணிகளை அமைக்க முடிந்தால் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்பார். யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடாக உள்ள ஜெர்மனியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறும். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அதிபராகப் பதவியேற்றிருந்தார்.

Germany world

ஃப்ரெட்ரிக் மெர்ஸ்

இதற்கிடையே இப்போது அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், அங்கு வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது. அங்கு மொத்தம் 630 இடங்கள் உள்ள நிலையில், குறைந்தது 316 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். தற்போதுள்ள டிரெண்டை வைத்துப் பார்க்கும் போது வலதுசாரி கட்சியான சிடியு/ சிஎஸ்யு 208 இடங்களில் வெல்கிறது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி 152 இடங்களிலும், எஸ்பிடி 206 இடங்களிலும் வெல்கிறது.

இதனால் சிடியு கட்சியின் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அங்கு அதிபராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஃப்ரெட்ரிக் மெர்ஸ், விரைவாக ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

யார் இந்த மெர்ஸ்

மெர்ஸ் ஒரு கார்ப்ரேட் வழக்கறிஞர் மற்றும் மல்டி மில்லியனர் ஆவார்.. அவர் இதுவரை ஒருபோதும் அமைச்சராக இருந்ததில்லை.. ராணுவம், சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏஞ்சலா மேர்க்கலுக்கு இணையான தலைவராக கருதப்பட்டார். இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக அவர் ஓரம் கட்டப்பட்டார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாம் பார்க்கலாம்.

1955ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ஜெர்மனியின் பிரிலோன் நகரில் பிறந்தவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ். அவரது தந்தை ஒரு நீதிபதி ஆவார். நீதித்துறையில் செலவாக்கு மிக்க குடும்பமாக அவரது குடும்பம் இருந்தது. கடந்த 1981இல் உடன் பணிபுரிந்த சார்லோட் என்ற வழக்கறிஞரை மெர்ஸ் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி இப்போது நீதிபதியாக உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

என்ன செய்தார்

அவர் முதலில் ராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து பான் பல்கலைக்கழகத்திலும் பின்னர் மார்பர்க் பல்கலைக்கழகத்திலும் சட்ட படிப்பை மேற்கொண்டார். அதன் பிறகு 1985ம் ஆண்டு சார்ப்ராக்கனில் நீதிபதியானார். இருப்பினும், ஓராண்டு மட்டுமே அவர் நீதிபதி பதவியில் இருந்தார். ஜெர்மன் கெமிக்கல் இண்டஸ்ட்ரி அசோசியேஷனின் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும் என்பதற்காக அவர் 1986ல் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 1989 முதல் அரசியலில் இருந்து வருகிறார். மெர்ஸ் ஒரு உரிமம் பெற்ற பைலட். அவர் இரண்டு விமானங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

அவர் 1972ம ஆண்டு முதலே சிடியு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். 1989இல் அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார்.. தொடர்ந்து முக்கிய பதவிகளை வகித்த பிறகு, 2000ஆம் ஆண்டில் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக ஆனார். 2005ம் ஆண்டு அவரது சிடியு கட்சி எஸ்பிடி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. அப்போது ஏஞ்சலா மெர்கல் அதிபரான நிலையில், மெர்ஸ் ஓரம்கட்டப்பட்டார். இதனால் அரசியலில் இருந்து விலகிய அவர், மீண்டும் கார்ப்ரேட் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

மீண்டும் அரசியலில் கம்பேக்

கடந்த 2018ல் ஏஞ்சலா மெர்கல் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், அதன் பிறகே மெர்ஸ் மீண்டும் அரசியலில் நுழைந்தார். இருப்பினும், சில காரணங்களால் அப்போது நூலிழையில் அதிபர் பதவியைத் தவறவிட்டார். அதன் பிறகு மெல்லக் கட்சியில் தன்னை ஒரு வலிமையான தலைவராக முன்னிறுத்திக் கொண்ட மெர்ஸ் இப்போது அதிபராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+