சீனாவின் "சிம்ம சொப்பனம்".. ஒரே இரவில் "டிராகனை" கதற வைத்த ஒற்றை பெண்.. யார் இந்த நான்சி பெலுசி!
பெய்ஜிங்: சீனாவை திக்கி திணற வைத்து தண்ணீர் குடிக்க வைத்துள்ளார் நான்சி பெலுசி. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரான இவரின் தைவான் விசிட் சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
சீனா அருகே தென் சீன கடல் எல்லையில் இருக்கும் தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானோ நாங்கள் தனி நாடு என்று கூறி வருகிறது. தைவானை இன்னும் ஐநாவோ., அமெரிக்காவோ தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரிக்க வில்லை.
சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது.
ஆனால் இப்போது திடீரென நான்சி பெலுசி தைவான் சென்று இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

போர் பதற்றம்
நான்சி பெலுசியின் தைவான் வருகைக்கு எதிராக சீனா கடுமையாக கொதித்து போய் இருக்கிறது. நான்சி வருகையால் . சீனா தைவானை சுற்றி போர் பயிற்சி செய்து வருகிறது. தைவானுக்கு உள்ளே சீனா 21 போர் விமானங்களை அனுப்பி உள்ளது. நாளையில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக தைவானின் கடல் பகுதியில் சீனா பயிற்சி செய்ய உள்ளது. தைவான் கடல் பகுதியை நோக்கி சீனாவின் டாங்கிகளும் சென்றுள்ளன. இதனால் அங்கு முழு போருக்கான ஆயத்தம் நடப்பதாக அச்சம் எழுந்துள்ளது. தைவான், சீனா, அமெரிக்கா என்று மூன்று நாடுகளை ஒரே நேரத்தில் பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார் பெலுசி. யார் இவர்? சீனாவின் மீது இவரின் கோபத்திற்கு என்ன காரணம்?

யார் பெலுசி?
பெலுசி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார். அங்கு உள்ள பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் இவர்தான். இதற்கு முன் 2007-2011 வரை இந்த பதவியை வகித்தார். பின்னர் 2019ல் இருந்து தற்போது வரை இந்த பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார். பெலுசி 1987ல் இருந்து கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். அதிபர் பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் இவர்.

பின்னணி
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்த ஒரே பெண் இவர்தான். முன்னாள் அதிபர் டிரம்பிற்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தவர் பெலுசி. டிரம்பிற்கு மட்டுமின்றி அதற்கு முன்பே குடியரசு கட்சியின் புஷ் அரசுக்கும் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தார் பெலுசி. முக்கியமாக ஈர்க்கில் புஷ் போர் தொடுக்க அறிவித்ததை கடுமையாக எதிர்த்தவர் பெலுசி. அந்த போரை பெலுசி எதிர்த்ததுதான் அவருக்கான பெரிய அடையாளமாகவும் மாறியது.

முற்போக்கானவர்
இது போக பல முற்போக்கான திட்டங்களை இவர் ஆதரித்து உள்ளார். மேலும் டிரம்ப் கொண்டு வர துடித்த பல பிற்போக்கான திட்டங்களை பெலுசி கடுமையாக எதிர்த்து உள்ளார். முக்கியமாக வெளிநாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குழந்தைகளை சிறையில் அடக்கும் டிரம்ப் முடிவை கடுமையாக எதிர்த்தார். அதேபோல் டிரம்பின் immigration ban மற்றும் அமெரிக்காவை சுற்றி சுவர் எழுப்பும் திட்டங்களை மிக கடுமையாக எதிர்த்தார்.

துப்பாக்கி எதிர்ப்பு
துப்பாக்கி கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கும் இவர், அசால்ட் துப்பாக்கிகளை தனி நபர்களுக்கு விற்க கூடாது, துப்பாக்கி விற்கும் முன் கடுமையான சோதனைகளை, விசாரணைகளை செய்ய வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். அதேபோல் எல்ஜிபிடிக்யூ++ மக்களுக்கான உரிமைகளை பல முறை பேசி இருக்கிறார். கரு கலைப்பு என்பது மனித உரிமை. இதற்கு தடை விதிக்க கூடாது என்றும் தனி நபர் உரிமை பற்றி முற்போக்கான நிலைப்பாட்டை கொண்டவர் இவர்.

சீனா எதிர்ப்பு
சீனா மீது கடுமையான விமர்சனங்களை கொண்டவர் பெலுசி. சீனாவில் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆசிய நாடுகள் மீது சீனா அத்துமீறுகிறது. சீனா அண்டை நாடுகளில் அத்துமீற பார்க்கிறது என்று பெலுசி கூறி இருக்கிறார். இப்போது இல்லை தியான்மென் போராட்டம் சீனாவில் 1989ல் நடைபெற்ற தியான்மென் போராட்டங்கள் பலருக்கு தெரிந்து இருக்கும். அங்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஹு யாப்பொங் மரணம், அதற்கு முந்தைய பொருளாதார மாற்றங்கள், அரசின் கட்டுப்பாடுகள் என்று பலவற்றை எதிர்த்து மாணவ, மாணவியர் நடத்திய போராட்டம்தான் தியான்மென் போராட்டம்.

ராணுவம் புகுந்து தாக்குதல்
இந்த போராட்டத்தில் கடைசியில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பலர் பலியானார்கள். இந்த தியான்மென் போராட்டம், தியான்மென் சதுக்க படுகொலைகள் உலகம் முழுக்க பிரபலம். இதில் மக்கள் போராட்டத்திற்கு அப்போதே நேரடியாக ஆதரவு கொடுத்தவர். சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டவர், அனுமதி இன்றி தியான்மென் சதுக்கத்திற்கு விசிட் அடித்து கவனம் ஈர்த்தார்.அப்போதே சீனா இவர் மீது கடுமையாக கோபம் அடைந்தது.

ஹாங்காங்
அதற்கு பின் பெலுசி பல முறை சீனாவை விமர்சனம் செய்துள்ளார். ஹாங்காங்கில் சீனாவின் அத்துமீறலை மிக கடுமையாக விமர்சித்து இருக்கிறார். சீனாவுடன் மொத்தமாக வர்த்தகத்தை நிறுத்த வேண்டும். அவர்கள் அண்டை நாடுகளில் மனித உரிமை மீறல்களை செய்கிறார்கள் என்று பெலுசி கடும் விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக தலாய்லாமா போன்ற திபெத் தலைவர்களை சந்தித்து பெலுசி ஆதரவு கொடுத்தார்.

பெலுசி விமர்சனம்
திபெத்தில் சீனா அத்துமீறுவதாக திபெத்தில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் 2008ல் பேசியவர்தான் பெலுசி. இந்தியா சீனாவிற்கு எதிராக உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர் பெலுசி. அமெரிக்காவில் பிடன் உடல்நிலை சரியில்லாத நிலையில் அதிபர் ரேஸில் கமலா ஹாரிஸ் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அதிபர் ரேஸில் இருப்பது பெலுசிதான். அடுத்த முறை இவர் அதிபர் தேர்தலில் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது. அதிபராக அளவிற்கு வலிமை கொண்ட பெலுசி சீனாவை தொடர்ந்து எதிர்த்து வருவதுதான் சர்வதேச அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பெலுசி எதிர்காலத்தில் அதிபராகும் பட்சத்தில் இரண்டு நாட்டு உறவு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications