கவர்ச்சி + இளமை ஊஞ்சலாடும் "ஹன்சா".. 90 வயதில் கர்ப்பமா.. அழகியலை குவித்த அதிசயம்.. எங்கேன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: 90 வயதில் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது? இதெல்லாம் ஜப்பானிலோ, சீனாவிலோ கிடையாது.. நம்ம அண்டை நாட்டில்தான் இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது..!!

உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்... ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர்களாகவும் இருக்கிறார்கள்.

Who is this Hansa tribes and motherhood at-the age of 90 the strangeness of the hansa tribe

மாரடைப்பு, மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் போன்றவை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாக இருக்கிறது.

உடல் எடை: உடல் எடையை பராமரிப்பது, அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது, அதிலும் சிவப்பு இறைச்சியை குறைவான அளவிலேயே உட்கொள்வது, மீன் வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, போன்றவைகள் காரணமாக சொல்லப்பட்டு வருகின்றன.. மேலும் ஜப்பானியர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதும் ஒரு காரணம் என்கிறார்கள்.. ஆனால், இந்த ஜப்பானியர்களுக்கே டஃப் தந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நீங்கள் எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் இந்த ஹன்சா பள்ளத்தாக்கில்தான் பிறந்திருக்க வேண்டும்.. அந்த அளவுக்கு ஆச்சரியங்களை அள்ளி தருகிறது இந்த ஹன்சா பள்ளத்தாக்கு.. இது பாகிஸ்தானில் இருக்கிறது.. பலுசிஸ்தானின் ஹன்சா-நகர் மாவட்டத்தில் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது இந்த பள்ளத்தாக்கு. இந்த ஹன்சா பள்ளத்தாக்கு மொத்தம் மூன்று பகுதிகளாக உள்ளது.. மேல் ஹன்சா (கோஜல்), மத்திய ஹன்சா மற்றும் கீழ் ஹன்சா (ஷினாகி).

Who is this Hansa tribes and motherhood at-the age of 90 the strangeness of the hansa tribe

ஹன்சா சமூகம்: இந்த நாட்டின் சுற்றுலா தலங்களில் ஹன்சா பள்ளத்தாக்கு மிக மிக முக்கியமானது.. பாகிஸ்தானின் மற்ற சமூகங்களைக் காட்டிலும் ஹன்சா சமூகத்தினர் நிறைய படித்தவர்கள்.. கிட்டத்தட்ட 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகிறார்கள். ஹன்சா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 'புருஷோ' என்று பெயர்.. இவர்களின் மொழியும் புருஷாஸ்கி' என்று அழைக்கப்படுகிறது.. இந்த பள்ளத்தாக்கில் உள்ள ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், எல்லாருமே இளமையாகவே இருப்பார்களாம்.. ஆண்கள், பெண்கள் என யாருக்குமே வயதாகாமலேயே உள்ளதாம்..

அதனால்தான், இந்த கிராமத்தை "இளைஞர்களின் சோலை" என்கிறார்கள்.. இந்த ஹன்சா பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் மற்ற மக்களை விட, வித்தியாசமானவர்கள்.. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள்.. இவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? 120 முதல் 150 வருடங்கள் வரை வாழ்கிறார்களாம்.. இந்த பெண்கள் 90 வயதிலும் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியும்.. 80 வயது வரை இளமையாகவே இருப்பார்களாம்.. இயற்கையிலேயே மனபலம், உடல்பலம் உள்ளதால், இவர்கள் யாருமே மருத்துவமனைக்கு போவது கிடையாதாம்.. உலகின் மிக அழகான பெண்களில், இந்த ஹன்சா பள்ளத்தாக்கு பெண்களும் அடக்கம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்: 60-70 வயது பெண்கள், பார்ப்பதற்கு 20-25 வயது பெண்கள் போலவே இருப்பார்கள்.. இந்த பெண்கள் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு காரணம், அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரை குடிக்கிறார்கள்.. அதில்தான் குளிக்கிறார்கள்.. அதில்தான் சமைக்கிறார்கள்.. இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்து காணப்படுவது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும்.. இதைதவிர, பழங்குடி மக்கள் என்பதால், "ஹுன்சா மக்கள் தேன் அதிகம் சாப்பிடுகிறார்கள்..

இந்த சமுதாய மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்... இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார்கள்.. அந்த அளவுக்கு சுறுசுறுப்பானவர்கள்.. இவர்கள் யாருமே சைக்கிள் உட்பட எந்த வாகனங்களையும் பயன்படுத்துவதில்லை.. பெரும்பாலும் நடந்தே செல்கிறார்கள்.. தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை வாக்கிங் போகிறார்கள். ஜாகிங் செய்கிறார்கள்.. அதாவது குறைவாக சாப்பிட்டுவிட்டு, அதிகமாக நடக்கிறார்கள்..

இவர்களின் பிரதான உணவு இறைச்சி ஆகும்.. ஆனாலும், ஏதாவது முக்கியமான நாட்களில் மட்டுமே இறைச்சியை சாப்பிடுகிறார்கள். இந்த சமூகத்தை பற்றி நிறைய புத்தகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, 'தி ஹெல்தி ஹன்சாஸ் (The Healthy Hunzaz) மற்றும் தில் லூஸ்ட் கிங்டம் ஆப்தி ஹிமாலயாஸ் (The Lost Kingdom of the Himalayas) போன்ற புத்தகங்களில் இவர்களை பற்றி விலாவரியாக சொல்லப்பட்டுள்ளதாம்.. இவர்களின் வாழ்க்கை முறை பிறருக்கு ஆச்சரியத்தையும், முன்னுதாரணத்தையும் தந்துகொண்டிருக்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+