மோசமான வைரஸ்கள் உள்ளன.. "லீக்கானால்" அவ்வளவுதான்! உக்ரைன் போரில் மூக்கை நுழைத்த WHO.. என்னாச்சு?
மாஸ்கோ: உக்ரைனில் இருக்கும் மோசமான கிருமிகள், வைரஸ்கள் போரின் போது லீக்காகும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. கார்கிவ், சுமி, கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா தீவிரமான போரை நடத்திக்கொண்டு இருக்கிறது.
இதுவரை உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து 20 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். 20000 பொது மக்கள் வரை அங்கு ரஷ்ய படைகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

போர் உக்ரைன்
போர் நடைபெற்று வரும் உக்ரைன் மருத்துவ துறையில் மிகவும் முன்னேறியது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பலர் இங்கே மருத்துவம் படிக்க வருகிறார்கள். அதேபோல் இங்கு மருத்துவமனைகளும், ஆராய்ச்சி கூடங்களும் கூட அதிக அளவில் இருக்கின்றன. பல்வேறு விதமான கிருமிகள், மருந்துகள், வைரஸ்கள் இங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. போரால் இந்த கூடங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன.

மருத்துவ துறை
இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் மோசமான கிருமிகள், வைரஸ்கள் போரின் போது லீக்காகும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் ஆராய்ச்சி மையங்களில் நிறைய வைரஸ்கள் உள்ளன. போர் சமயத்தில் இவை லீக்காகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆராய்ச்சி மையங்கள் பல்வேறு நகரங்களில் உள்ளன. முக்கியமாக சுமி, கார்கிவ் போன்ற நகரங்களில் உள்ளன.

வைரஸ்கள்
அங்கு ரஷ்ய படைகள் அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது ரஷ்ய தாக்குதலில் இது போன்ற வைரஸ்கள் தப்பித்தவறி வெளியேறினால் அது புதிய நோய் உண்டாக காரணமாக அமையும். மனிதர்கள் இடையே இதனால் புதிய வைரஸ்கள் பரவும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உலக சுகாதார மையம் இங்கு என்னென்னெ வைரஸ்கள் உள்ளன என்று சொல்லவில்லை.

எச்சரிக்கை
இங்கு நிறைய விதமான விஷங்கள் உள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த கூடாது. அப்படி இல்லையென்றால் அரசு இந்த பகுதிகளில் உள்ள வைரஸ்களை முன்கூட்டியே அழிக்க வேண்டும். அது மட்டுமே பாதுகாப்பை தரும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. முன்னதாக உக்ரைனில் பயோ வார் ஆயுதங்களை அமெரிக்கா தயாரிப்பதாக ரஷ்யா கூறிய நிலையில்தான் உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications