முஸ்லிம்கள் தான்.. ஆனாலும் காசா மக்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் எகிப்து, ஜோர்டான்.. ஏன் தெரியுமா?
இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் வசிக்கும் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றன. இருப்பினும் காசாவில் உள்ள இஸ்லாமிய மக்களை பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அகதிகளாக ஏற்க தயக்கம் காட்டி வரும் நிலையில் அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் 2வது வாரமாக தொடரந்து வருகிறது. இதுவரை இருதரப்பையும் சேர்த்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையே தான் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனை தரைமட்டமானது. சிகிச்சை பெற்ற நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை தாக்குதல்: இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் உலுக்கி உள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது. மாறாக ஹமாஸின் ராக்கெட் தான் மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ளது. இப்படி பரஸ்பரம் இருவரும் குற்றம்சாட்டிய நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்பது தெரியவில்லை.
அகதிகளாக தயாரான மக்கள்: இதற்கிடையே தான் இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வருகிறது. தற்போது காசாவின் எல்லை பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்களை இடம்பெயர்ந்து செல்ல அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து காசா மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைய தயாராக இருக்கின்றனர்.
ஏற்க மறுக்கும் நாடுகள்: ஆனால் அவர்களை ஏற்க பிற நாடுகள் மறுத்து வருகின்றன. குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூட காசா பகுதி மக்களை அகதிகளாக ஏற்க மறுக்கின்றன. இதனால் காசாவிலேயே அந்த மக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காசாவில் வசிக்கும் மக்களும் இஸ்லாமியர்கள் எனும் நிலையில் அவர்களை ஏற்க இரு நாடுகளும் மறுப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
முன்பு நடந்தது என்ன: அதாவது பாலஸ்தீனத்தில் இருந்து பிரித்து யூதர்களுக்காக இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது. 1948ல் இஸ்ரேல் புதிய நாடாக உருவானது. அப்போது 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு 1967 ல் நடந்த போரில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. இதையடுத்து 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறினர். இதில் பெரும்பாலானவர்கள் ஜோர்டானுக்கு சென்றனர். மேலும் பலர் வளைகுடா அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பாலஸ்தீனத்தின் மக்கள்தொகை கணிசமாக குறைந்தது.
ஏற்க மறுப்பது ஏன்: அதோடு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் காசா சென்றது. இந்த வேளையில் 1948 ல் அகதிகளாக வெளியேறியவர்களை மீண்டும் அனுமதிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இதுதான் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணமாகும். அதன்பிறகு இஸ்ரேல் காசாவை விட்டு வெளியேறினாலும் கூட இஸ்ரேலால் வெளியேற்றப்பட்ட காசா மக்கள் மீண்டும் பாலஸ்தீனம் திரும்பவில்லை. அவர்கள் அகதிகளாகவே பிற நாடுகளில் வசிக்க தொடங்கினர்.
ஜோர்டான் நினைப்பது என்ன: இது இஸ்ரேலுக்கு சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் அதுபோன்ற நிலை மீண்டும் உருவாகி விடும் என ஜோர்டான், எகிப்து நாடுகள் நினைக்கின்றன. மேலும் ஜோர்டானை பொறுத்தமட்டில் அங்கு ஏற்கனவே அதிகளவில் பாலஸ்தீனியர்கள் உள்ளனர். அதோடு தற்போதும் காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை மனிதாபிமான அடிப்படையில் அகதிகளாக ஏற்றுக்கொண்டால் காசா என்ற நகரே காலியாகிவிடும். மேலும் இஸ்ரேல் முழுமையாக அதனை கைப்பற்றி விட வாய்ப்புள்ளது. அதன்பிறகு அகதிகளை மீண்டும் அங்கு இஸ்ரேல் அனுமதிக்காது என ஜோர்டான் நினைக்கிறது.
எகிப்து நிலை என்ன: அதேபோல் தான் எகிப்தும் நினைக்கிறது. மேலும் எகிப்தில் தற்போது பொருளாதா நிலைமை என்பது மிகவும் மோசமாக உள்ளது. இதுதவிர சமீபத்தில் தான் சூடானில் இருந்து 3 லட்சம் பேர் எகிப்துக்கு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் காசா பகுதி மக்களையும் அகதிகளாக அனுமதிப்பது என்பது அந்த நாட்டால் சமாளிக்க முடியாது. இதனால் எகிப்து யோசிக்கிறது.
எகிப்து அதிபர் கருத்து: அதோடு காசாவில் இருந்து பொதுமக்களை முழுமையாக வெளியேற்றுவது தான் இஸ்ரேலின் நோக்கம் என எகிப்து கூறி வருகிறது. எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல் சிஸ்ஸி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்த யுத்தம் என்பது ஹமாசுக்கு எதிரானதாக இல்லை. மாறாக காசாவில் வசிக்கும் மக்களை எகிப்துக்கு குடிபெயரை வைக்கும் முயற்சியாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
காரணம் இதுதான்: இதனால் தான் காசா நகர் என்பது பாலஸ்தீனத்தில் வாழும் மக்களுக்கானதாகவும், அங்குள்ள இஸ்லாமியர்களுக்கானதாகவும் இருக்க வேண்டும். ஒருபோதும் அது இனி இஸ்ரேலின் பகுதியாக மாறிவிடக்கூடாது என்பதில் ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் தான் காசா பகுதி மக்களை அவர்கள் ஏற்க தயக்கம் காட்டி வருகின்றன என தகவல்கள் வெளியாகி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications