ஈரானை சும்மா விடமாட்டோம்.. போர் விமான தாக்குதல் ஏன்? வார்னிங்குடன் இஸ்ரேல் விளக்கம் - பதற்றம்
டெல் அலிவ்: கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு இன்று இஸ்ரேல் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? என்று இஸ்ரேல் ராணுவம் சார்பில் பரபரப்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது. காசா பகுதியில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த போர் நடவடிக்கை நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த ஹிஸ்புல்லாக்கள் யார் என்றால் அவர்களும் ஈரான் ஆதரவில் செயல்படும் அமைப்பு தான். இஸ்ரேலும், ஈரானும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லாக்கள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் என்பது பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு
எதிரான போரை கைவிட வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால் இஸ்ரேல் போரை கைவிடவில்லை. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி அதன் படை தளபதிகள், தலைவர்களை இஸ்ரேல் தீர்த்து கட்டி வருகிறது. இதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் தலைவர்கள் இன்றி தற்காலிக தலைவர்கள் தலைமையில் இஸ்ரேலுடன் மல்லுக்கட்டி வருகின்றது. இது ஈரானை கொந்தளிக்க செய்துள்ளது. இதனால் ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. சுமார் 185 ஏவுகணைகளை ஈரான் தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்கதலில் இஸ்ரேலில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பான அயன்டோம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியது. இதற்கிடையே தான் ஈரான் கடந்த 1ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு இன்று இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிகாலை முதல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகேரி அந்த நாட்டின் ஐடிஎப் எனும் பாதுகாப்பு படைக்கான எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஈரான் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. அந்த தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் கடந்த அக்டோபர் மாதம் முதல் நேரடி தாக்குதல் உள்பட 7 முனைகளில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்'' என கூறியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications