உலகிற்கு பேராபத்து? எதிரிக்கு எதிரி நண்பன்! கிட்ட நெருங்கும் சீனா-ரஷ்யா! அடுத்து பனிப்போர் 2.o? பரபர

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரஷ்யாவும் சீனாவும் பல துறைகளில் இரு தரப்பும் நெருங்கி வரும் நிலையில், இது அடுத்தவொரு பனிப்போரைத் தொடங்கும் ஆபத்து உள்ளது. அப்படி ஆரம்பித்தால் அது உலக பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் தள்ள வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Recommended Video

    Russia-வின் தோற்கடிக்க முடியாத ஆயுதம் Yars | Donald Trump கொடுத்த உறுதி | Russia Missile Test

    சர்வதேச அரசியலில் இப்போது சிக்கலான சூழலே இருந்து வருகிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எப்போதும் ஆகாது. உக்ரைன் போருக்குப் பிறகு மோதல் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது.

    அதேபோல சமீப ஆண்டுகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கும் உச்சத்தில் உள்ளது. இது சர்வதேச அரசியலில் எங்கு அடுத்த ஒரு பனிப்போருக்குக் காரணமாக அமையுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

    சீனா

    சீனா

    அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் மோதல் அனைவருக்கும் தெரியும். அதேபோல சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயும் சில காலமாக மோதல் உச்சத்தில் இருந்து வந்தது. இது டிரம்ப் காலத்தில் மிக மோசமாக இருந்தது. இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரிகளை ஏற்றி வரிப் போரிலேயே ஈடுபட்டிருந்தது. அதன் பின்னரே பைடன் ஆட்சியில் மோதல் சற்று குறைந்தது. நிலைமை மெல்ல மேம்பட்டு வந்த சூழலில், சீன உளவு பலூன் அமெரிக்காவுக்குள் நுழைந்தது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் மோசமாக்கியது.

    நெருங்கும் ரஷ்யா சீனா

    நெருங்கும் ரஷ்யா சீனா

    இதனிடையே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், சீனாவும் ரஷ்யாவும் தொடர்ந்து நெருங்கி வருகிறது. சமகால உலகில் வன்முறையான ஆட்சியாளர்களாகக் கருதப்படும் ஜி ஜின்பிங்கும், புதினும் சமீபத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டனர். புதிய சகாப்தத்திற்கான விரிவான திட்டம் என்ற ஒப்பந்தத்தை இருவரும் போட்டுக் கொண்டனர். ஜி ஜின்பிங் மற்றும் புதின் இடையே இருக்கும் உறவு என்பது குழப்பமான ஒன்றாகவே உள்ளதாக மேற்குலக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலக நாடுகளுக்குச் சவால்

    உலக நாடுகளுக்குச் சவால்

    உலகமயமாக்கலுக்குப் பிறகு சர்வதேச அளவில் பெரியளவில் மோதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது இந்த இரு நாடுகளும் நெருங்குகிறது. இது மற்றொரு பனிப்போருக்குத் தொடக்கமாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைன் போரைச் சீனா வெளிப்படையாக ஆதரித்தது. பனிப்போருக்குப் பிறகு சர்வதேச அளவிலான முக்கிய மோதலாக இது இருக்கும் நிலையில், புவிசார் அரசியலும் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் ஜனநாயக நாடுகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்த இரண்டு சர்வாதிகாரங்களுக்கு எதிராக மீண்டும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்த வேண்டிய சவாலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    1950கள்

    1950கள்

    சோவியத் யூனியனை சுற்றிப் பனிப் போர் ஆரம்பித்தது. முதலில் அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1950களில் சர்வதேச அரசியலில் மிக பெரிய மாற்றங்கள் நடந்தன. அந்த காலகட்டத்தில் 35 ஆண்டுகளில் இரண்டு உலகப் போர் நடந்திருந்தது. மேலும், அப்போது சோவியத் யூனியன் மற்றும் சீன என இரு மிகப் பெரிய மாற்றங்கள் நடந்தன. சர்வதேச அளவிலும் வலிமையாக இருந்த ஒட்டோமன், ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஜப்பான் என ஐந்து பேரரசுகள் சரிந்தன. அதுநாள் வரை சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரு பெரும் ஏகாதிபத்திய அமைப்புகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கடும் சரிவை எதிர்கொண்டது. இவை அனைத்தும் சேர்ந்து பனிப்போருக்குக் காரணங்களாக அமைந்துவிட்டது.

    பனிப்போர்

    பனிப்போர்

    பனிப்போர் என்பது சர்வதேச அளவில் அதிகாரத்தை மாற்றியமைத்துவிட்டது. இப்போது சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் நெருங்குவது கவலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஏனென்றால், இப்போது ரஷ்யா, சீனா நாடுகளில் தலைமை பொறுப்பில் இருக்கும் இருவருமே கடந்த நூற்றாண்டில் அந்த இரு நாடுகளிலும் ஏற்பட்ட புரட்சியின் போரு உருவெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் இருவருமே மேற்குலக சித்தாந்தத்திற்கு எதிரானவர்களே இருக்கிறார்கள். இதனால் வரும் காலத்தில் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.

    புதினும் ஜி ஜின்பிங்கும்

    புதினும் ஜி ஜின்பிங்கும்

    புதின் அரசியல் வாழ்க்கை என்பது கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டனில் வார்சா ஒப்பந்தத்தின் சமயத்தில் தான் அடுத்த கட்டத்திற்கு வந்தது. சோவியத் யூனியனின் சரிவை 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு என்றே ரஷ்யாவின் புதின் தொடர்ந்து கூறி வருகிறார். மறுபுறம் ஜி ஜின்பிங்கை பார்த்தால், மாவோ முன்னெடுத்த புதிய சீனா பிரசாரம் தொடங்கிய காலத்தில் உருவானவர். இப்போது சீனாவாக இருக்கும் பிரதேசம் கடந்த காலங்களில் மகத்தான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்போது தான் ஜி ஜின்பிங் வளர்ச்சி இருந்தது.

    பனிப்போர் 2.o

    பனிப்போர் 2.o

    கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது இரு நாட்டு ராணுவமும் பல மடங்கு வலிமையாக இருக்கிறது.. இரு நாடுகளும் அணு ஆயுத திறன் கொண்டவை என்பதையும் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இரு தரப்பும் ராணுவம், ஆற்றல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நெருங்கி வருகிறது. பல துறைகளில் இரு தரப்பும் நெருங்கி வரும் நிலையில், இது அடுத்தவொரு பனிப்போரைத் தொடங்கும் ஆபத்து உள்ளது. அப்படி ஆரம்பித்தால் அது உலக பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் தள்ள வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+