Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3000 வருட தவறு.. கத்தார் ஏன் மன்னிப்பு கேட்கணும்? உலகை உலுக்கிய FIFA தலைவர் பேச்சு.. ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டோஹா: கத்தார் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டி தீவிரமாக நடந்து வரும் நிலையில்தான் கத்தாரில் நடக்கும் சில விஷயங்கள் நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகின்றன. கத்தார் உலகக் கோப்பை நடக்கும் முன்பே இது போன்ற சர்ச்சைகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டன. இந்த சர்ச்சைகளை மனதில் வைத்துதான் முன்னாள் ஃபிபா தலைவர் செப் பிளாட்டர் கூட.. கத்தாரில் உலகக் கோப்பை நடத்த அனுமதித்தே தவறு என்று கூறினார். இந்த நிலையில் தற்போதைய ஃபிபா தலைவர் கியான்னி இன்பாண்டினோ முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார். அவர் என்ன சொன்னார்? கத்தார் கால்பந்து கோப்பையில் என்னதான் சர்ச்சை என்று பார்க்கலாம்.

கத்தாரில் இந்த வருடம் நடக்கும் கால்பந்து தொடர்தான் மிகவும் காஸ்ட்லியான தொடர். இந்த தொடருக்காக 220 பில்லியன் டாலரை கத்தார் செலவு செய்துள்ளது. உலகில் இதுவரை நடந்ததிலேயே மிக பிரம்மாண்டமாக இந்த தொடரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்தான் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள், நாடுகள், பார்வையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பொது இடம்

பொது இடம்

அதன்படி பொது இடங்களில் மது அருந்த கூடாது. அதாவது பார்களில் கூட அதற்கான கார்ட், அதற்கான வீசா வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே மது அருந்த அனுமதி. பொது இடங்களில் கணவன், மனைவிகள் நெருக்கமாக இருக்க கூடாது. வெளியூர் தம்பதிகள் கை கோர்க்கலாம், ஆனால் மற்றபடி நெருக்கமாக எதுவும் செய்ய கூடாது. அதேபோல் சுற்றுலா வந்தபெண்கள் ஹிஜாப் போடாமல் வரலாம். ஆனால் சிறிய உடைகளை உடுத்த கூடாது. தன்பாலின உறவினர்களுக்கு நாட்டிற்குள் அனுமதி உள்ளது. மைதானத்திற்குள் யாரும் முத்தமிட கூடாது. மைதானத்திற்குள் யாரும் பியர் குடிக்க கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

இந்த கட்டுப்பாடுகள் இரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கத்தாரில் இந்த தொடருக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று பல நாட்டை சேர்ந்தவர்கள் வேலைக்கு வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், குறைவான ஊதியம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. அதாவது இந்த பணிகளை செய்யும் போது அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கத்தார் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கூப்பாடுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அது கத்தார் நாட்டின் விதி. அமெரிக்காவில் தொடர் நடக்கும் போது இஸ்லாமிய நாடுகள் அங்கே சென்று பெண்கள் எல்லோரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அமெரிக்கா விதியில் அதற்கு இடம் இல்லை. அப்படி இருக்கும் போது கத்தார் விதி என்னவோ அதை அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டினர் மதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் ஃபிபா தலைவர் கியான்னி இன்பாண்டினோ முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.

 கத்தார்

கத்தார்

அதில், இதை பற்றி ஏன் இப்போது பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. கத்தாரை குற்றம் சாட்டும் நபர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். நான் ஐரோப்பாவை சேர்ந்த ஒருவன். கடந்த 3000 வருடங்களாக ஐரோப்பியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று உலகிற்கே தெரியும். உலகம் முழுக்க அவர்கள் என்ன செய்தார்கள் என்று உலகிற்கே தெரியும். அதற்கு எல்லாம் சேர்த்த நாம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். கத்தாருக்கு கலாச்சார பாடம் எடுக்கும் முன் நாம்தான் உலகிற்கே மன்னிப்பு கேட்க வேண்டும்.

 என்ன தவறு

என்ன தவறு

காத்தருக்குள் எல்லோரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எல்லா மதத்தினரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எல்லா நிறத்தினரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாரும் தடுக்கப்படவில்லை. அதுதான் எங்களின் கோரிக்கை. எங்களின் கோரிக்கையை கத்தார் ஏற்றுக்கொண்டுவிட்டது, என்று கூறியுள்ளார். ஃபிபாவின் இயக்குனர்களில் ஒருவரான பிரையான் ஸ்வான்சன் இதை பற்றி பேசுகையில்.. நான் ஒரு கே. இது உலகிற்கே தெரியும். நான் தன் பாலின ஈர்ப்பு கொண்டவன்.

நான் கே

நான் கே

நான் கத்தாரில் இப்போது உங்கள் முன் இருக்கிறேன். என்னை இவர்கள் தடுக்கவில்லையே. என்னை இவர்கள் வெளியே அனுப்பவில்லையே. அவர்கள் என்னையும் ஒன்றாகவே வரவேற்றனர். எல்லோரையும் கத்தார் அரசு ஒன்றாகத்தான் அழைத்து உள்ளது. இதை வைத்து இப்போது ஏன் சர்ச்சை செய்கிறார்கள். இதை இவர்கள் பெரிதாக்குவதன் காரணம் என்ன? நான் கத்தாரில் இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் பாதுகாப்பாக இருக்கிறேன், என்று தெரிவித்து உள்ளார். அவரின் பேச்சு தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+