95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாகத் திகழும் கூகுள், தற்போது உயிரியல் துறையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. இது ஆச்சரியமாகத் தெரிந்தாலும், அந்நிறுவனம் சுமார் 3.2 கோடி கொசுக்களைப் பாதுகாப்பாக வளர்த்து அவற்றை பொதுவெளியில் விடத் திட்டமிட்டுள்ளது. கூகுள் ஏன் இது போலத் திட்டமிடுகிறது.. இதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இப்போது மிக பெரிய ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் கீழ் இயங்கும் 'வெரிலி' (Verily) என்ற நிறுவனம் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. குறிப்பாகக் கொசுக்களை ஒழிப்பது தொடர்பாகப் புதிய ஆய்வுகளைச் செய்து வருகிறது.

Google Mosquito science world

கூகுள் கொசுக்கள்

அதன் ஒரு பகுதியாகச் சுமார் 3.2 கோடி கொசுக்களை உருவாக்கி பொதுவெளியில் விட இருக்கிறார்களாம். பொதுவாகக் கொசுக்கள் என்றாலே நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால், கூகுள் தயாரிக்கும் இந்தக் கொசுக்கள் நோய்களைப் பரப்புவதற்குப் பதிலாக, நோய்களைப் பரப்பும் மற்ற கொசுக்களைக் கட்டுப்படுத்தப் போகின்றன. இந்த 'டிபக்' (Debug) திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண் கொசுக்கள் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன.

எப்படிச் செயல்படுகிறது

இந்தத் திட்டத்தின் அடிப்படை 'வோல்பாக்கியா' (Wolbachia) எனப்படும் ஒரு பாக்டீரியாவில் உள்ளது. ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் ஆண் ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti) கொசுக்களில் இந்தப் பாக்டீரியா செலுத்தப்படுகிறது. இந்த ஆண் கொசுக்கள் கடிக்காது என்பது மிக முக்கியமான விஷயம். இவை பொதுவெளியில் விடப்படும்போது பெண் கொசுக்களுடன் இணையும். இருப்பினும், அந்தப் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரியாது. இதன் மூலம் அடுத்த தலைமுறை கொசுக்கள் உருவாவதை இயற்கையான முறையில் தடுக்க முடியும்.

முன்னதாக மனிதக் குறுக்கீடு இல்லாமல் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. ஆனால் கூகுளின் இந்தத் தொழில்நுட்பம், ரோபோட்டிக் கருவிகளைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக ஆண் கொசுக்களைப் பிரித்தெடுக்கிறது. மில்லி விநாடிகளில் ஆயிரக்கணக்கான கொசுக்களை வகைப்படுத்தி, இந்த குறிப்பிட்ட வோல்பாக்கியா ஆண் கொசுக்களை மட்டும் காற்றில் விடுவதுதான் இதிலுள்ள மிக பெரிய வெற்றி. இது சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்காமல் இலக்கை அடைய உதவும்.

முதல்முறை இல்லை

அதேநேரம் இது போன்ற முயற்சி இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரெஸ்னோ பகுதியில் இந்தச் சோதனையை வெரிலி நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அங்கு சுமார் 1.5 முதல் 2 கோடி கொசுக்கள் விடுவிக்கப்பட்டன. அந்தச் சோதனையின் முடிவில், சம்பந்தப்பட்ட பகுதியில் ஏடிஸ் எகிப்தி கொசுக்களின் எண்ணிக்கை 95 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் World Mosquito Program முன்னெடுத்த இதேபோன்ற சோதனைகள் பாசிட்டிவ் முடிவுகளையே தந்துள்ளன.

இந்த வெற்றிகள் தந்த நம்பிக்கையில்தான் இப்போது 3.2 கோடி கொசுக்களைக் கொண்டு மிகப் பெரிய அளவிலான திட்டத்தைக் கூகுள் கையில் எடுத்துள்ளது. இது வெறும் சோதனையோடு நின்றுவிடாமல், உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை இந்த முறை பெருமளவு குறைக்கும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அடுத்த திட்டம்

கூகுளின் அடுத்தகட்ட நகர்வு என்பது இந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதுதான். தற்போதுள்ள கொசு ஒழிப்பு மருந்துகளுக்கு எதிராகக் கொசுக்கள் தங்கள் எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொண்ட நிலையில், உயிரியல் ரீதியான இந்த மாற்றம் ஒரு நிரந்தரத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைக் காட்டிலும், இந்த வோல்பாக்கியா முறை பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டிற்குள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல கோடி வோல்பாக்கியா கொசுக்களைப் பரப்பி, டெங்கு இல்லாத உலகம் என்ற நீண்ட கால கனவுக்கு அருகே இது நம்மை அழைத்துச் செல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+