SCO மாநாட்டில் பங்கேற்க.. சீனா செல்லும் மோடி! அவ்வளவு முக்கியமான அமைப்பா இது? விஷயமே வேற
பெய்ஜிங்: இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே ஏகப்பட்ட தகராறுகள் இருக்கின்றன. ஆனால் இந்த சூழலில், SCO உச்சி மாநாட்டில் பங்கேற்க ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா செல்கிறார் பிரதமர் நரேந்தி மோடி. இவ்வளவு பஞ்சாயத்துகளுக்கு நடுவே எதற்காக சீனா செல்ல வேண்டும்? அந்த அளவுக்கு இந்த உச்சி மாநாடு மிக முக்கியமானதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' என்பதன் ஆங்கில சுருக்கம்தான் SCO. இதில் இந்தியா உட்பட 10 உறுப்பு நாடுகளும், பார்வையாளர்களாக 2 நாடுகளும் இருக்கின்றன. வரி தொடர்பான விஷயத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள சரியான கூட்டணி அவசியம். அதனால்தான் மோடி இந்த அமைப்பின் மாநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீனா செல்கிறார்.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த அமைப்பின் அடுத்த பத்தாண்டுகளுக்கான வளர்ச்சிப் பயணத்தை இந்த மாநாடு வகுக்கும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த 24 ஆண்டுகளில் ஒரு விரிவான அமைப்பாக உருவெடுத்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியை உள்ளடக்கியுள்ளது.
SCO அமைப்பின் வரலாறு
எல்லைப் பாதுகாப்புப் பிரச்சனைகளை நிர்வகிக்க கடந்த 1996ல் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைந்தன. இதற்கடுத்து கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி உஸ்பெகிஸ்தான் ஆறாவது உறுப்பினராக இணைந்தது. இதற்கடுத்துதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இது இப்போது உலக மக்கள் தொகையில் பாதியை கொண்டிருக்கிறது. அதேபோல உலக அளவிலான உள்நாட்டு உற்பத்தியிலும், உலக நிலப்பரப்பிலும் கால்வாசி பகுதியை கொண்டிருக்கும் தலைவர்களை உள்ளடக்கியிருக்கிறது.
SCO-ல் இந்தியா
2001க்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்தன. SCO தற்போது 10 உறுப்பு நாடுகளையும், இரண்டு பார்வையாளர் நாடுகளையும், 14 பேச்சுவார்த்தை நாடுகளையும் கொண்டுள்ளது. பொதுவான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, பல்வேறு நாகரிகங்களுக்கான மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியை நோக்கிய தேடல் ஆகியவற்றை வலியுறுத்தும் அமைப்பாக SCO தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது.
SCO பலம்
சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. அதாவது இந்த அமைப்பு தொடங்கி 20 ஆண்டுகளில் இதன் உறுப்பு நாடுகளின் மொத்த வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரித்தது. கடந்த 2022ல் வெளியிடப்பட்ட ஒரு வர்த்தக மேம்பாட்டு அறிக்கையின்படி, உலக வர்த்தகத்தில் உறுப்பு நாடுகளின் பங்கு 2001 இல் 5.4 சதவீதத்திலிருந்து 2020 இல் 17.5 சதவீதமாக உயர்ந்தது. இது மிகப்பெரிய வளர்ச்சி. இந்த வளர்ச்சி SCO அமைப்பு எப்படி வலுவானதாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஏன் இந்தியாவுக்கு SCO முக்கியம்?
இந்த அமைப்பில் இந்தியா இணைந்ததற்கும், தொடர்ந்து அமைப்பில் நீடிப்பதற்கும் காரணம் இருக்கிறது. அதாவது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கவும் SCO அமைப்பு முக்கியமானதாக இருக்கிறது. எனவேதான் இந்த அமைப்பில் இந்தியா தொடர்கிறது.
குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், சொந்த வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் இந்த அமைப்பு நமக்கு மிகுந்த பலன் உள்ளதாக இருக்கிறது. அதிலும் இப்போது அமெரிக்கா பரஸ்பர வரி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் நேரத்தில் வர்த்த உறவை அமெரிக்கா தாண்டி வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனவேதான் இந்த அமைப்பில் நாம் இன்னமும் நீடித்து இருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்கிறார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications