இந்தோனேசியா விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது ஏன்?
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் இருந்து54 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி மாயமானது. இதில் பயணித்த 54 பேரின் கதி என்னவானதோ என்று பலரும் அஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகாலத்தில் மட்டும் பல விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. அதுவும் கடந்த ஆண்டு மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் சில நாட்களுக்கு முன்புதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேருந்திலோ, புகைவண்டியிலோ ஒரு விபத்து நடந்தால், அங்கே அருகில் இருக்கின்ற மக்களின் உதவியாவது கிடைக்கும். அதிகபட்சமாய் 50,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் பழுது என்றால் யாரும் உதவிக்கு வரமுடியாது. ஆளில்லாத் தீவுகளில் விமானம் விழுந்தால் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காது. இவ்வகையான விபத்துகளில் உயிரிழப்புகளும், அதிக பொருட்சேதமும் ஏற்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானது உறுதியாகி, ரத்தமும் சதையுமாய் உடன் வாழ்ந்தவர்களின் சடலத்தைக்கூடப் பெறமுடியாத நிலையில் இருக்கும் உறவினர்கள் நிலை இன்னமும் மோசம். சென்ற நூற்றாண்டில் வானில் மாயமாகி, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னரும் கிடைக்காத விமானங்கள் 125-க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
2014ம் வருடத்தில் மட்டும் 8 விமான விபத்துகள் நடந்திருக்கின்றன. பிப்ரவரி 11 ல் அல்ஜீரிய விமானம் லாக்ஹீட் சி 130 ஹெர்குலஸ் முதல் தொடங்கிய விபத்து, டிசம்பர் 28ல் இந்தோனேசிய விமானம் ஏர் ஏசியா 8501 வரை தொடர்ந்தது. இந்தோனேசியாவில் அடிக்கடி விமான விபத்துக்கள் நடக்கின்றன. இதோ இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு விமான விபத்து நிகழ்ந்து 150 பேரின் உயிரை காவு வாங்கியது. அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
- கடந்த 2010 , மே 12ம்தேதியன்று லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலியாகினர்.
- 2010, மே 22ம் தேதியன்று ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.
- 2010, ஜூலை 28ம்தேதியன்று மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமா பாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி, 152 பேர் மரணமடைந்தனர்.
- 2014, மார்ச் 8ம்தேதியன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து -பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் மாயமானது. இந்த விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
- 2014, ஜூலை 17ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லை யருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேரும் கருகி உயிரிழந்தனர்.
- 2014, ஜூலை 24ம்தேதி அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவனத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலியாகினர்.
- 2014, டிசம்பர் 28ம்தேதியன்று இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் உயிரிழந்தனர்.
- 2015, மார்ச் 24ம்தேதியன்று தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் ஏ320 விமானம் விபத்துக்குஉள்ளானதில் 150 பேர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications