Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூளையோ மூளை.. ஈரானை தாக்க 25 நாட்கள் காத்திருந்த இஸ்ரேல்.. ஏன் தெரியுமா? இப்படியொரு காரணமா!

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: ஈரான் மீது இன்று இஸ்ரேல் 100 போர் விமானங்கள் மூலம் குண்டுகளாக ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள 20 ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த ‛அட்டாக்’ நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் 25 நாட்கள் காத்திருந்ததன் பின்னணி பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் நடவடிக்கை மற்றும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாக்கள் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஈரான் கடும் கோபம் அடைந்தது. இதையடுத்து கடந்த 1ம் தேதி இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஈரான் 185க்கும் அதிகமான ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியது.

israel iran

இந்த ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தியது. இருப்பினும் சில ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து சேதம் ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி காசா மீதான போர் நடவடிக்கைக்கு பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்கிய 2வது தாக்குதல் இதுவாக அமைந்தது.

இதையடுத்து ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேல் நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோருக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்தது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வந்தது. ஈரானும் தொடர்ந்து இஸ்ரேலின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வந்தது. ஆனால் ஏவுகணை தாக்குதல் நடந்து 25 நாட்கள் கடந்தும் கூட ஈரான் மீது ‛அட்டாக்கை’ தொடங்காமல் இஸ்ரேல் அமைதி காத்து வந்தது. இது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகளை குண்டுகளாக வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான 100 போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் 5வது ஜெனரேஷன் எப்-35 அதிர் பைட்டர் ஜெட்கள், எப் 15I ரா'ம் கிரவுண்ட் அட்டாக் ஜெட்கள், எப் -16I சுபா ரே் டிபென்ஸ் ஜெட்ஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் மூலம் ராம்பேஜ் லாங்க் ரேஞ்ச், சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் ‛ராக்ஸ்’ நெக்ஸ்ட் ஜெனரேஷன் உள்ளிட்ட ஏவுகணைகளை வீசி போர் விமானங்கள் இஸ்ரேலின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை முடித்த இஸ்ரேல் போர் விமானங்கள் வெற்றிகரமாக நாடு திரும்பி உள்ளன. மேலும் ஈரான் மீதான பதிலடி தாக்குதல் முடிந்து விட்டது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் 25 நாட்கள் காத்திருந்தது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்த அடுத்த சில நாட்களிலேயே ‛அட்டாக்’ செய்தால் ஈரான் உஷாராக இருக்கும் என்று அந்த நாடு நினைத்ததாகவும், இதனால் ஈரான் மீதான தாக்குதலை தள்ளிப்போட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் உண்மை என்பது அதுவல்ல. அதாவது இஸ்ரேலும், ஈரானும் அருகருகே உள்ள நாடுகள் இல்லை. அதேபோல் இஸ்ரேலும், ஈரானும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகளுக்கும் இடையேயும் பிற நாடுகள் உள்ளன. ஒரு திசையில் இஸ்ரேல் - ஈரான் இடையே சிரியா, ஈராக் உள்ளது. இன்னொரு திசையில் லெபனான், ஈராக் உள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் இஸ்ரேலில் இருந்தே ஈரானுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதை இஸ்ரேல் நினைத்தது.

இதனால் சற்று யோசித்த இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஈரான் வான்வெளிக்குள் நுழைந்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. ஆனால் கடந்த 25 நாட்களாக ஈரானில் வானிலை நிலவரம் என்பது மோசமாக இருந்தது. போர் விமானங்கள் பறப்பது மற்றும் போர் விமானங்களில் இருந்து தரையில் இருக்கும் ஈரானின் ராணுவ நிலைகளை கேமராவில் பார்த்து ஏவுகணை வீச தெளிவான காலநிலை வேண்டும். அப்போது தான் துல்லியமாக இலக்குகளை குறிவைத்து தாக்க முடியும்.

இதனால் போர் விமானங்களில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற காலநிலைக்காக இஸ்ரேல் காத்திருந்தது. இன்று அதற்கான காலநிலை ஈரானில் நிலவிய நிலையில் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் அந்த நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்து 3 வகையான ஏவுகணைகளை குண்டுகளாக வீசி திட்டமிட்டபடி பிசிறு தட்டாமல் துல்லியமாக தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் நாடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+