ஹமாஸை விடுங்க! அந்த பக்கம் ஹிஸ்புல்லா போடும் பிளான்! சத்தமின்றி இஸ்ரேல் செய்யும் காரியம்! பரபரப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் 10 நாட்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், மற்றொரு புறம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் உருவாகுமோ என்றும் அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே யுத்தம் தொடர்கிறது. ஹமாஸ் படை முதலில் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இதனால் அங்கே மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் தீவிரமாகத் தொடரும் நிலையில், வடக்கு இஸ்ரேலிலும் லெபனானின் ஹிஸ்புல்லா படையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. லெபனானில் நாட்டில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டில் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல வடக்கு இஸ்ரேலில் மற்ற இடங்களிலும் லெபானின் ஹிஸ்புல்லா படை தாக்குதல் நடத்தியுள்ளது. மற்றொரு இடத்தில் ஹிஸ்புல்லா படை அனுப்பிய ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் உள்ள வீடுகளைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலடியாக, வியாழக்கிழமை தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையைக் குறிவைத்து இஸ்ரேலும் தாக்கியுள்ளது. இதிலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
போர் சூழல்: இது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இந்த பதற்றத்தால் ஹிஸ்புல்லாவுடனும் இஸ்ரேல் யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல இஸ்ரேலும் கூட லெபானான் எல்லையில் உள்ள தனது கிரியாத் ஷெமோனா நகரில் இருந்து 23,000 பேரை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் எங்கு மோதல் தீவிரமடையுமோ என்றும் அஞ்சப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதில் அமெரிக்கப் படைகளை நோக்கி மொத்தம் 3 ஏவுகணைகள் வந்துள்ளது. அதில் இரண்டு டிரோன்களை அமெரிக்கா அழித்துவிட்டது. இருப்பினும், மூன்றாவது டிரோனை முழுமையாக அழிக்க முடியவில்லை. அந்த மூன்றாவது டிரோன் அமெரிக்கா தளத்தைத் தாக்கிவிட்டது. இதில் பாதிப்பு குறைவாகவே இருந்துள்ளது. இந்த தாக்குதலை ஈராக்கில் உள்ள ஷியா இயக்கம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பழி தீர்க்க: இப்படிச் சுற்றிச் சுற்றி இஸ்ரேலுக்கு அங்கே பெரிய சிக்கல் நிலவுகிறது. இஸ்ரேல் பலவீனமாக அங்கே இருக்கும் அமைப்புகள் நினைக்கிறது. இதனால் இந்த நேரத்தில் உள்ளே இறங்கித் தாக்குதல் நடத்தினால் கடந்த காலங்களில் அடைந்த தோல்விகளுக்குப் பழி தீர்க்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். மேலும், இப்போது இஸ்ரேல் ஹமாஸ் படைக்கு எதிராகப் போராடும் நிலையில், எல்லா பக்கத்தில் இருந்தும் தாக்குதல் நடத்த இந்த அமைப்புகள் நினைக்கலாம். கடந்த 1948இல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அங்கே பிரச்சினை இருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படித் தாக்குதல் நடந்தால் அங்கே நிலைமை மோசமாகும். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவோ அல்லது வேறு நாடுகள் வந்தால்.. அரபு நாடுகளும் போரில் இணைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த பிராந்தியம் முழுக்க பரபரப்பு ஏற்படும். அது நிலைமை மேலும் மேலும் சிக்கலாகவே மாற்றும் என அஞ்சப்படுகிறது. போர் இந்த பிராந்தியம் முழுக்க பரவினால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். இது சர்வதேச அளவில், குறிப்பாக இந்தியாவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications